இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மனத்தாழ்மை என்பது தேவனின் கிருபையின்றி நாம் யாராக இருப்போம் என்பதை அறிந்து , அந்த அங்கீகாரத்தை கொண்டு மற்றவர்களுக்குச் ஊழியம் செய்யவும், மீட்கவும் பயன்படுத்தலாம். இயேசுவைப் போல மனத்தாழ்மையுடன் வாழ்வதால், நாம் மேலே சொன்ன வார்த்தையை மாத்திரம் கடைப்பிடிக்காமல் ஒரு படி மேலே சென்று அதைகாட்டிலும் சிறப்பாக செய்ய முடியும் - அது என்னவென்றால் நாம் நம்மை நடத்துவதை காட்டிலும் பிறறை மிக சிறப்பாக நடத்துவதாகும் . நாம் தகுதியற்றவர்கள் அல்லது அபாத்திரர் என்பதற்காக இதைச் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறோமா? இல்லை! இயேசுவானவர் எல்லாவற்றிற்கும் தகுதியானவராகவும் மகிமை வாய்ந்தவராகவும் இருந்தார், ஆனால் அவர் நம் அனைவரையும் மீட்பதற்காக தன்னை தியாகம் செய்தபோது தன்னை விட மற்றவர்களை சிறப்பாக நடத்துவதைத் தேர்ந்தெடுத்தார். இது இவ்வுலகத்திலே மிக சிறந்த மாதிரியாகும். இந்த மாதிரியை யாவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது. இது அவ்விசுவாசி அல்லது பாசாங்கு செய்பவர்களுக்கானது அல்ல. ஆனால் அது இயேசுவின் சீஷர்கள் அனைவருக்கும் அவசியம். ஏன்? மெய்யான மனத்தாழ்மை இறுதியில் கனத்துக்குரியது. (குறிப்பு: பிலிப்பியர் 2:10ஆம் வசனத்தை வாசித்து, விசுவாசிகளுக்கும் அதே வகையான வெகுமதி வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!)

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , அடியேனை உமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டு, என்னைப் பரிசுத்தவானாகவும் , விலையேறப் பெற்றவனாகவும் மாற்றியதற்காக உமக்கு நன்றி. நீர் உம்மை பார்த்தது போலவே அடியேனும் என்னை பார்க்க எனக்கு உதவி செய்யும் , பின்னர், உம் விலையேறப்பெற்ற பிள்ளைகளில் ஒருவனாக இருப்பதினால் , உம் மகிமையை மற்றவர்கள் காண உதவும் வழிகளில் அவர்களுக்கு ஊழியம் செய்ய பரிசுத்த ஆவியின் வல்லமையின் அதிகாரத்தை எனக்கு தாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து