இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
உங்களிடம் என்றென்றும் நிலைத்திருக்கும் காரியம் அப்படி என்ன இருக்கிறது? அந்த காரியம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் இணைக்கப்படாவிட்டால் அதில் ஒரு பயனுமில்லை . நாம் விரும்பி பின்தொடரும் அநேக விஷயங்கள் வெறுமையான , மாயமான , ஆழமற்ற மற்றும் வீணான காரியங்களாகும் . ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் அன்புகூருகிற யாவருக்கும் கிருபை கொடுக்கப்படும் ; கிருபையானது தங்கிதாபரிக்கும் மற்றும் கிருபை என்றென்றும் நம்முடன் ஜீவிக்கும் . அவர் நம் ஆண்டவராகவும், அவர் நம்முடைய நேசமாக இருக்கும்போது காலங்களோ அல்லது கல்லறையோ அவருக்குள் பெற்றுக்கொண்ட நம் கிருபையை பறிக்க இயலாது.
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமுள்ள தேவனே , நான் உம்மை குறித்து எதுவும் அறிந்து கொள்வதற்கு முன்பே நீ அடியேனை நேசித்தீர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நீர் என்மீது அதிக அன்பு கொண்டிருந்தாலும், உம்முடைய விருப்பத்திலிருந்து நான் விலகிவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் பிதாவே , என் இருதயத்தின் ஆழத்திலிருந்து நான் உம்மை நேசிக்கிறேன், உமது குமாரன் இயேசுவை அனுப்பியதற்காக நன்றி. அவருடைய தியாகமும், உம் கிருபையும் எனக்கு நம்பிக்கையை அளித்தது மட்டுமல்லாமல், இன்று வரப்போகும் எதையும் எதிர்கொள்ளும் நம்பிக்கையையும் எனக்கு அளித்துள்ளது. உமது பரிசுத்த ஆவியின் வல்லமையால் உம் மீதும் உம்முடையநேச குமாரன் மீதும் அன்பினால் என் இருதயத்தை நிரப்புங்கள். அன்பான பிதாவே , உமது அன்பு என்மீது உள்ளதைப் போலவே, உம் மீதான எனது விசுவாசமும் அசையாததாகவும், அழியாததாகவும் இருக்கட்டும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.