இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவன் முந்தி நம்மில் அன்பு கூர்ந்தார் ! மற்றவர்களை நேசிப்பதற்கு இயேசுவைப் மாதிரியாக பின்பற்றும்படி நம்மை அழைப்பதற்கு முன்பாக , இயேசுவின் மூலமாய் நம்முடைய பாவங்களுக்கான பரிகாரத்தை செய்ய அவர் மாபெரும் விலையைச் செலுத்தினார். அன்பை நாம் மற்றவர்களிடத்தில் காண்பிக்கும்படி தேவன் கட்டளையிடுவதற்கு முன்பு தேவன் தம்முடைய இரக்கத்தையும் நீதியையும் வெளிப்படுத்திய விதம் இயேசுவே. அன்பு என்றால் என்னவென்று நமக்குத் தெரியும், ஏனென்றால் தேவன் நம்மிடமிருந்து அதைக் கேட்பதற்கு முன்பு அதைக் அவர் செய்து காட்டினார். தேவனின் இரக்கம் , நீதி, கிருபை மற்றும் அன்பை நாம் எவ்வாறு மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறோம் என்பது தேவனின் அன்பை நாம் எவ்வளவு புரிந்துககொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது!
என்னுடைய ஜெபம்
பிதாவே , உம் அன்பு மிகவும் பரந்ததாகவும், கிருபையுள்ளதாகவும், வாழ்க்கையை மாற்றுவதாகவும் தெரிகிறது. ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் என் இருதயத்தை மறுரூபமாக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன், அதனால் நான் உம் அன்பை என் அன்றாட வாழ்க்கையில் இன்னும் சிறப்பாக பிரதிபலிக்கும்படி மற்றும் மகிமைப்படுத்துபடி செய்ய முடியும் . உம் மாபெரிதான அன்புக்காக நன்றி, இது என்னை இரட்சித்தது மற்றும் நான் மற்றவர்களை நடத்தும் விதத்தை மாற்றுகிறது. இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் ஆமென்.