இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் சத்தியமுள்ளவராயிருக்கிறார். அவருடைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் அவருடைய நோக்கங்கள் நல்லவை என்றும் நாம் விசுவாசிக்கலாம் . இவை நமக்கு எப்படி தெரியும்? ஒவ்வொரு காலைதோறும் சூரியன் உதயம் என்பது பரலோகத்திற்கும் புலோகத்திற்கும் பிதாவானவர் அவர் உண்டாக்கின உலகம் யாவையும் ஒரு முறையான செயல்பாட்டில் இயக்குகிறார் இது அவர் கிரியையில் நடப்பிக்கிறார் என்பதை நினைப்பூட்டுகிறது. இது இயற்கையில் நிதர்சனமான உண்மை என்றால், ஆவிக்குரிய பிராகரமாகவும் அது உண்மையாகும் . தேவனின் உண்மைத்தன்மையின் நினைவூட்டலான ஒவ்வொரு சூரியோதயத்தையும் வாழ்த்தி வரவேற்போம் .

என்னுடைய ஜெபம்

மாபெரிதானவரும், மகத்துவமுள்ளவருமான சிருஷ்டிகரே, உம்முடைய ஈவுக்காகவும் , உம்முடைய சத்தியத்தை நினைவூட்டுவதற்காகவும் இன்றே உம்மை போற்றுகிறேன் .சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளும், எங்களை உம்முடைய நித்திய வீட்டிற்கு அழைத்து வர உமது குமாரனை இரண்டாம் வருகையில் அனுப்புவீர் என்று நீர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நாளை நினைப்பூட்டுகிறது. அந்த நாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.உம் சத்திய பிரசன்னத்தை இன்று எனக்கு நன்கு உணர்ந்து கொள்ளும்படி உதவியருளும் . உம் வாக்குத்தத்தங்கள் யாவற்றையும் நிறைவேற்றுபவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஜெபிக்கிறேன் . ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து