இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த அண்ட சராசரங்களையும் அதில் உள்ள யாவையும் உருவாக்கியவர் தனிப்பட்ட முறையில் நம்மை நேசிக்கிறார். அவர் நம்மை அறிந்திருக்கிறார், தாமாகவே முன் வந்து நம்மை சிருஷ்டித்தார் . நம்முடைய பரலோகத் தகப்பன் நம்மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். நம்முடைய பெலவீனங்களையும் பாவங்களையும் குறித்து தேவனானவர் அறிந்திருந்தும், நம்மை மீட்பதற்காக பயங்கரமான மற்றும் கொடூரமான விலையைச் செலுத்த அவர் தயாராக இருந்தார். நாம் சில சமயங்களில் பெலவீனமாகவோ அல்லது கலகக்காரராகவோ இருந்தாலும், அவர் இன்னும் நம்மை நேசிக்கிறார், நம்மை மன்னிக்கிறார், மேலும் நம்முடைய பாவங்களை அறிக்கையிடவும், அவற்றிலிருந்து திரும்பவும், அவருடைய நித்திய வீட்டிற்கு வர தயாராக இருக்கும்போது நம்மை மீண்டும் வரவேற்கிறார். தேவன் தொடர்ந்து, உண்மையுள்ளவராக , கிருபை நிறைந்தவராக நம்மை நேசித்திருப்பாரானால் , அந்த அன்பை நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது எப்படி?

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , உம் அற்புதமான மற்றும் கிருபை நிறைந்த அன்பிற்காக நன்றி. உம் பரிசுத்த ஆவியின் மூலம் உம் அன்பை என் இருதயத்தில் தொடர்ந்து பொழிந்தருளும் . உம் பிள்ளைகளுடனே என் அன்பினாலே அவர்களை மன்னிக்கவும் , பொறுமை காண்பிக்கவும் , தியாகமாய் இருக்க எனக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் , ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து