இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

என்ன ஒரு ஆச்சரியமான சிந்தனை! நான் என் குடும்பத்தில் உள்ளவர்களை நேசிக்கும்போது என் வீட்டில் தேவனை காணலாம். இப்பிரபஞ்சத்தின் பிதாவானவர் என்னுடைய சபையில் வாழ்கிறார், என் சபை குடும்பத்தில் உள்ளவர்களை நான் நேசிக்கும்போது அவருடைய சமூகத்தை அங்கீகரிக்க முடியும். நான் என்னைச் சுற்றியுள்ளவர்களை நேசிக்கும்போதும், கிறிஸ்துவுக்குள் உள்ள நம் சகோதர சகோதரிகளிடம் அற்பமான, மன்னிக்காத, விமர்சனத்துக்குப் பதிலாக, கடுமையாக நடந்துகொள்வதற்குப் பதிலாக அன்பாக இருக்கத் தேர்ந்தெடுக்கும்போது சர்வவல்லமையுள்ள தேவனின் அன்பு என் வாழ்க்கையில் அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது. தேவன் தம்முடைய பிரசன்னம், வல்லமை மற்றும் பரிபூரணத்தை நம்மில் வெளிப்படுத்துகிறார்! தேவன் அன்பாகவே இருக்கிறார் ; நாம் ஒருவரையொருவர் நேசிக்கும்போது அவருடைய மாறாத சமூகத்தை வெளிப்படுத்துகிறோம்.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , தயவுசெய்து உமது பிரசன்னத்தை , வல்லமையை மற்றும் பரிபூரணத்தை உமது பிள்ளைகள் மீதான என் அன்பின் மூலமும், ஒருவருக்கொருவர் எங்களின் அன்பின் மூலமும் தெரியப்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே , நான் இதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து