இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய அதிகாரத்தின் அடையாளம், மெய்யாகவே நாம் தேவனின் பிள்ளைகள் என்பதைக் காண்பிப்பது , நமக்குள் வாழும் பரிசுத்த ஆவியானவரே . நாம் வாழும் வாழ்க்கையில் தேவனின் தன்மையை விளங்கச் செய்ய பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுகிறார் (கலாத்தியர் 5:22). நாம் ஜெபிக்கும்போது ஆவியானவர் நமக்கு உதவுகிறார் (ரோமர் 8:26-27). ஆவியானவர் பாவத்தை ஜெயிக்க நமக்கு அதிகாரமளிக்கிறார் (ரோமர் 8:13) மேலும் நாம் கற்பனை செய்யாத காரியங்களைச் செய்ய நமக்கு பெலன் தருகிறார் (எபேசியர் 3:20-21). ஆவியானவர் நம் உடைந்த நிலையில் நம்மை ஆறுதல்படுத்துகிறார் மேலும் தேவனின் பிரசன்னத்தை நம்மில் நிஜமாக்குகிறார் (யோவான் 14:15-26). ஆவியானவர் தொடர்ந்து தேவனுடைய அன்பை நம் இருதயங்களில் ஊற்றுகிறார் (ரோமர் 8:5). நாம் தேவனின் பிள்ளைகள் என்பதற்கான மிகத் துல்லியமான அடையாளம் ஆவியானவர் மாத்திரமே (ரோமர் 8:9), ஏனென்றால் நாம் தேவனின் பிள்ளைகள் என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு ஆவியானவர் நமக்கு உதவுகிறார் - ஒருவருக்கொருவர் நாம் அன்பு காண்பிக்க (யோவான் 13:34-35). ஆசீர்வாதமாய் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவிக்காக தேவனுக்கு நன்றி! [தேவனின் பிள்ளைகளாக, பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்வில் பல முக்கியமான விஷயங்களைச் செய்கிறார். நம்முடைய மின்னஞ்சல் மற்றும் அனுதின வார்த்தையின் விளக்கத்தின் மூலம் கிடைக்கும் தேவனின் பரிசுத்த அக்கினி , நம் வாழ்வில் பரிசுத்த ஆவியின் செயலைப் பற்றிய இலவச தினசரி தேவனுடைய வார்த்தையை படியுங்கள் .]

என்னுடைய ஜெபம்

பிதாவே, உமது பரிசுத்தம், மகத்துவம் மற்றும் வல்லமைக்காக நான் உம்மைப் போற்றுகிறேன். உம் அன்பான கிருபைக்காக நன்றி. என்னை இரட்சித்த உமது தியாக அன்பினால் நான் தாழ்ந்திருக்கிறேன். ஆனால் இன்று, அன்பான பிதாவே, பிதாவாகிய உம்முடைய தகப்பனின் அன்பை எனக்கு அணுகக்கூடியதாகவும் உண்மையானதாகவும் ஆக்குகின்ற ஆவியானவர் என்னில் வாழ்ந்து, என்னை ஆற்றி, பரிசுத்தப்படுத்தி, ஆறுதல்படுத்தும் உமது பரிசுத்த ஆவிக்காக நான் உமக்கு மிகவும் நன்றி கூறுகிறேன். பரிசுத்த ஆவியின் ஈவுக்காக நன்றி , இயேசுவின் நாமத்தினாலே , என் இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன்! ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து