இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பாவத்தாலும் மரணத்தாலும் பாதிக்கப்பட்டாலும், மனிதர்கள் இன்னும் தேவனின் சாயலில் உண்டாகப்பட்டு , அவருடைய மகத்துவமுள்ள பராமரிப்பினால் நம் தாயினுடைய கர்பத்தில் ஜெனிபிக்கப்பட்டோம் . ஆனால் நமது பலவீனம் மற்றும் தோல்வியின் கடினமான யதார்த்தத்திற்கு எதிராக நாம் முந்திக் கொள்கிறோம். தேவனின் மிகத் தெளிவான குணாதிசயமான பரிசுத்தத்தில் நாம் அவரைப் போல இருக்க முடியாது. நாம் பாவம் செய்கிறோம். நாம் எதிர்த்து நிற்கிறோம். தோல்வி அடைகிறோம். செய்யக்கூடாது என்று தெரிந்ததைச் செய்கிறோம். தேவனுடைய சித்தத்தின் முக்கியமான விஷயங்களை நாம் புறக்கணிக்கிறோம் மற்றும் எதுவும் செய்யாமல் இருக்கிறோம். நம் வார்த்தைகளால், நாம் விரும்புகிறவர்களை காயப்படுத்தி துன்புறுத்துகிறோம். நமக்குள் இருக்கும் இந்த கசப்பான மற்றும் வரம்புக்குட்பட்ட உண்மைகளிலிருந்து நம்மை யார் காப்பாற்ற முடியும்? நாம் இயேசுவை நமது மேசியாவாகவும் ஆண்டவராகவும் நம்பும்போது அவருக்கு கனமும் மகிமையும் செல்கின்றன, ஏனெனில் அவர் நம்மை இந்தத் தீமைகளிலிருந்து காப்பாற்றி, மற்றவர்களுக்கும் தேவனுக்கும் ஆசீர்வாதமுள்ள வாழ்க்கையை வாழ நம்மை ஆயத்தப்படுத்துவார்.
என்னுடைய ஜெபம்
உன்னதமான தேவனே, நீரே கனத்துக்கும் துதிக்கும் பாத்திரரே . நீர் வல்லமைமிக்கவர், பரிசுத்தர் , ஒப்பிட முடியாதவர். அன்பாகவும், தயாளராகவும் , இரக்கமாகவும், மன்னிப்பவராகவும், மென்மையானவராகவும் இருக்க நீர் எங்களை உம் பிள்ளைகளாக தேர்ந்தெடுத்துள்ளீர். நீர் என் தேவனாக இருப்பதற்காகவும் , இன்னுமாய் எங்களை தேர்ந்தெடுத்த வழிக்காகவும் உமக்கு நன்றி . இயேசுவின் நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.