இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மை இரட்சிக்க இயேசுவை அனுப்புவதன் மூலம் தேவனின் அன்பை அவர் விளங்கச் செய்ததால் நாம் அவருடைய அன்பின் மீது நம்பிக்கை வைக்கலாம். (யோவான் 3:16-17). நாம் அவருடைய அன்பிலே உழன்று வாழவும் அந்த அன்பினால் ஆசீர்வதிக்கப்படவும் பிதாவானவர் விரும்புகிறார். அந்த அன்பு,தேவன் நம்மை கிருபையை கொண்டு இரட்சித்ததை விட மிக அதிகம். தேவனின் அன்பை அவர் நம் மூலம் தேவைப்படும் மற்றவர்களுக்கு நீட்டிக்கும்போது நாம் அதை அனுபவிக்கிறோம். அவருடைய அன்பு மீட்புடையது மற்றும் மறுருப்பமாக்க கூடியது - மற்றவர்களிடம் நம் அன்பான நடத்தைகள் மூலம் காண்பிக்கப்படுகிறது . கிறிஸ்துவுக்குள் உள்ள நம் சகோதர சகோதரிகளுக்கும், நம் அண்டை வீட்டாருக்கும், நம் எதிரிகளுக்கும் கூட வெளிப்படுத்தப்படும் நமது அன்பான அணுகுமுறைகள் , வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் அவருடைய பிரசன்னம் நிரூபிக்கப்பட்டு அனுபவிக்கப்படுகிறது. நாம் தேவனின் அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, ​​​​பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தை நாம் அனுபவிக்கும்போது, ​​அவருடைய அன்பு நம்மை ஆசீர்வதிக்கிறது (யோவான் 14:21, 23, 25).

என்னுடைய ஜெபம்

பரலோகத்திலுள்ள பிதாவே, உமது அன்பை நான் சார்ந்திருக்கிறேன். அது இல்லாமல் என் வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது; நான் முற்றிலும் தொலைந்து போனவனை போலாவேன் . இருப்பினும், பிதாவே நீர் என்னை நேசிக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன், அந்த அன்பினால் எனது எதிர்காலம் குறித்து நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இயேசுவின் வருகையில் உமது அன்பை அதன் முழு மகிமையில் நான் அனுபவிக்கும் நேரத்தையும், உம்மை முகமுகமாய் காணும் நேரத்தையும் என் வாழ்க்கையின் அடிவானத்தை நோக்கிப் பார்த்து, என் இருதயத்தில் ஆவலாய் காத்து நிற்கையில் நான் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறேன். என்னை நேசித்ததற்காக மிகவும் நன்றி. இயேசுவின் நாமத்தில், நான் உமக்கு நன்றிகளையும் துதிகளையும் செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து