இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவைப் போல நாம் மற்றவர்களிடம் அன்பாக வாழும்போது, ​​நம் இரட்சகர் மரணத்தை எதிர்நோக்கிய அதே நம்பிக்கையுடனே நாமும் எதிர்கொள்ள முடியும். நம்முடைய ஆவியை தேவனுடைய கரங்களில் ஒப்புவிக்கலாம் . அவருடைய கிருபைக்குள் நம்முடைய எதிர்காலத்தை நம்பலாம். நியாயத்தீர்ப்பில் தேவனுடைய குமாரனுக்கு முன்பாக நிற்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இருப்பினும், நமது நம்பிக்கை நமது தனிப்பட்ட சாதனைகளில் , மத முயற்சிகள் அல்லது நல்ல செயல்களில் இல்லை. நியாயத்தீர்ப்பு நாளில் நம்முடைய நம்பிக்கையானது, நம்முடைய இரட்சகரின் கிரியையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அவருடன் இணைக்கப்பட்டு அவருடன் மகிமையில் பாதுகாக்கப்படுகிறது (கொலோசெயர் 2:12-15; 3:1-4). அவருடைய அன்பு நம்மை பாவத்திலிருந்து மீட்பது மட்டுமல்ல; அவரை நம்பி அவருடைய அன்பில் வாழும்படி நம்மை மறுரூபமாக்கியது . அவருடைய அன்பு நமக்குக் கிடைத்த ஈவு மாத்திரமல்ல , நம் மூலமாகவும் மற்றவர்களுக்கு கொடுக்கப்படுகிறது . நம் பிதாவின் முன்னிலையில் நாம் அவருடன் நிற்கும் வரை இயேசுவின் ஜீவன் நமக்குள் இருப்பதை அறிந்திருப்பதால் நாம் நம்பிக்கையுடனே இருக்க முடியும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே , மற்றவர்களை நேசிக்கும் ஆற்றலை அடியேனுக்கு கொடுத்ததற்காக நன்றி. உம் அன்பு எனக்கு அளித்த நம்பிக்கைக்காக நன்றி. என்னைக் இரட்சிக்க எவ்வளவு பெரிய காரியங்களை நடப்பித்தீர் . உம் அன்பான கிருபைக்கும், இயேசுவின் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கைக்காகவும் நன்றி, அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து