இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அன்பு தன்னை பற்றி மாத்திரமே சிந்திக்காது , ஆனால் மற்றவர்களை குறித்தும் சிந்திக்கும் . அன்பின் இந்த குணங்கள் ஒவ்வொன்றும் சாந்தமும், தயவும் , மன்னிக்கும் மனப்பான்மையையும் அடிப்படையாகக் கொண்டது, அது மற்றவர்களை மேன்மையுள்ளவர்களாக கருதச் செய்கிறது மற்றும் நம் மீதும் நம்முடைய சுய ஆசைகளை முதன்மை படுத்துவதில்லை . பழைய பழமொழி இப்படியாக சொல்வதில் ஆச்சரியமில்லை "நான்..எனக்குமட்டும் ... என்பது ஒரு பெரிய பாவ வார்த்தை !". "நான்" மற்றவர்களை விட முக்கியமானவன் மற்றும் "எனக்கு " வேண்டும் மற்றும் வேறு ஒருவருக்கு உண்மையிலேயே தேவை என்றாலும் "நான்" மாத்திரம் ஜெயிக்க வேண்டும் அல்லது நான் மட்டும் அனுபவிக்க வேண்டும் ஆகிய இவை எல்லாம், "நான்" என்னுடைய ஜீவ பாதையை விட்டு விட்டேன் என்பதையும், கிறிஸ்துவின் அன்பைக் என்னுடைய வாழ்க்கையில் பிரதிபலிக்கவில்லை என்பதையும் காண்பிக்கிறது .

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே , உம் குமாரனையே ஜீவபலியாக தந்தவரே , உம்மைப் போலவே மற்றவர்களையும் கவனிக்கவும் அவர்களை மேன்மைப்படுத்தவும் எனக்குக் கற்றுக் கொடுத்தருளும் . நான் அன்புக்குரியவனாக இல்லாதபோதும் நீர் அடியேனை நேசித்தீர் , நான் தகுதியற்றவனாக இருந்தபோது என்னை மீட்டுக்கொண்டீர் என்பதை நான் அறிவேன். என்னை குறித்து மாத்திரம் சிந்திப்பதை விலக்கி, மற்றவர்களை நீர் பார்த்த விதமாய் பார்க்க எனக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து