இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சத்தியமுள்ள வார்த்தைகள் துல்லியமானவை. அன்புடன் பேசும் வார்த்தைகள் ஆசீர்வாதமாக இருக்கும். ஆனால் சத்தியமானது அன்புடன் பேசப்படும் போது மீட்பை உண்டாக்கும் : இந்த மாதிரியான பேச்சு அதைக் கேட்பவர்களை ஆசீர்வதிக்கிறது மற்றும் பேசுபவர்களை முதிர்ச்சியடைய செய்கிறது . அன்புடன் சத்தியத்தை பேசுவது என்பது பெரும்பாலும் எளிதானது அல்ல, அது மிகவும் உகந்தது ! தேவனை பாருங்கள், இயேசுவை அனுப்பியதன் மூலம் அவருடைய வார்த்தையை அன்புடன் பேசியது எவ்வளவு வேதனையானது என்று பாருங்கள். ஆனால் அந்த ஒரு ஜீவனுள்ள பலியின் வார்த்தையினால் , அவர் நம்மை இரட்சித்து, இரக்கத்தையும், கிருபையையும் மற்றும் அன்பின் இருதயத்தையும் வெளிப்படுத்தினார்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , நான் பேசும் வார்த்தைகள் சத்தியமாகவும் அன்பாகவும் இருக்கட்டும். வாதங்களில் வெற்றி பெற, மற்றவர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்த அல்லது மற்றவர்களை கவர "வேதனை உண்டாக்கும் சத்தியத்தை " நான் கூறியிருந்தால், தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகைப்படுத்தி, திரித்து அல்லது பொய் சொன்ன நேரங்களுக்காக என்னை மன்னியுங்கள். எனது வார்த்தைகள் எளிமையாகவும் மென்மையாகவும், சத்தியமாகவும் , அன்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் அவர்களிடம் பேசும் விதத்தில் மற்றவர்கள் உம்முடைய கிருபையை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து