இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

" நான் இயேசுவை நேசிக்கிறேன்!" மற்றும் "நான் உம்மை நேசிக்கிறேன், ஆண்டவரே, நான் உன்னை ஆராதிப்பதற்கு என் துதியின் சத்தத்தை உயர்த்துகிறேன், என் ஆத்மா மகிழ்ந்து களிக்கூறும் ..." எவ்வளவு நன்றாக இருக்கிறது. இருப்பினும், இந்த வார்த்தைகளைப் பாடுவதற்கு இயேசு ஒரு எளிய மற்றும் தெளிவான கேள்வியைக் கேட்பதன் மூலம் பதிலளிக்கிறார்: உங்கள் சகோதர சகோதரிகளை நேசிப்பதில் நீங்கள் எவ்வளவு உண்மையுள்ளவர்களாக இருக்கிறீர்கள்? நாம் தேவனை நேசிக்க முடியாது, இயேசுவைப் துதிக்க முடியாது, நம்மைச் சுற்றியுள்ளவர்களை நாம் நேசிக்காவிட்டால் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்டவர்களாய் இருக்க முடியாது.

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , நான் என் இருதயத்தில் அற்பத்தனத்தை வைத்திருந்ததற்காக அல்லது என் இரக்கம் தேவைப்படுபவர்களை மன்னிக்காமல் இருந்ததற்காக என்னை மன்னியுங்கள். நான் கிறிஸ்துவுக்குள் என் சகோதர சகோதரிகளிடம் அன்பில்லாமல் இருக்கும்போது அல்லது என் அண்டை வீட்டாரை நேசிக்காமல் இருக்கும்போது, ​​நான் உம் பார்வையில் அன்பற்றவனாக இருக்கிறேன் என்பதை நான் அறிவேன். சமீபத்தில் தீர்க்கப்படாத சில கிறிஸ்தவ உறவுகளை சரிசெய்யவும், நீண்டகால கசப்பை நீக்கவும், என்னை காயப்படுத்தியவர்கள் மீது உண்மையான அன்பை வழங்கவும் நான் பணியாற்றும்போது தயவுசெய்து என்னை ஆசீர்வதியுங்கள். இந்த சீர்படுத்தப்பட்ட நட்புகள் உமக்கு மகிமையையும் உம் திருசபைக்கு உயிர்ச்சக்தியையும் கொண்டு வர உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து