இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"தேவன் நம்மில் அன்பு கூருகிறார் " இதை மாத்திரம் வேதாகமம் சொல்லவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்போது நான் உங்களை குழப்ப விரும்பவில்லை . தேவன் நம்மில் அன்பு கூருகிறார் என்று வேத வார்த்தை பலமுறை சொல்கிறது. இருப்பினும், இங்கே முக்கியமான உண்மையைத் தவறவிடாதீர்கள். தேவன் நம்மில் அன்பு கூருகிறார் என்று ஒவ்வொரு முறையும் வேதம் சொல்லும் போது, ​​அவர் அந்த அன்பையும் விளங்கச்செய்தார் .தேவனின் அன்பு உணர்ச்சியையும் நோக்கத்தையும் விட மேலானது. தேவனின் அன்பு செய்து காண்பிக்கப்பட்டது. தேவன் நம்மில் மிகவும் அன்பாயிருக்கிறார் , அவர் "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று வார்த்தையினால் மாத்திரம் சொல்லவில்லை, தனது ஒப்பற்ற அன்பை நமக்குத் தருவதற்காகத் தம் நேச குமாரனையே அனுப்பி, ஜீவபலியாக ஒப்புக் கொடுத்தார் ! தேவன் கூறுவதை குறித்து நாம் ஒருபோதும் சந்தேகப்பட வேண்டியதில்லை. அவருடைய அன்பின் வாக்குறுதிகளை தமது கிரியைகளால் நிரூபிக்கிறார் .

Thoughts on Today's Verse...

Did you know the Bible doesn't just say, "God loves you." Now don't let me confuse you. Scripture does tell us many times that God loves us. However, don't miss the important truth here. Each time Scripture tell us that God loves us, it also demonstrates that love as well. God's love is more than emotion and intention. God's love is demonstrated. God loved us so much he didn't just say, "I love you." God showed his by sending and sacrificing his Son to give us his incomparable love! We never have to doubt that God means what he says. He has backed up his promises of love with his actions.

என்னுடைய ஜெபம்

அன்பும்,சர்வ வல்லமையுள்ள தேவனே , என்னில் அன்பாய் இருப்பதற்காக நன்றி. என்னில் அன்பாய் இருப்பேன் என்று சொன்னதற்கும், உம் அன்பை வெளிப்படுத்தியமைக்கும் நன்றி. அன்பான பிதாவே, நானும் உம்மை நேசிக்கிறேன் என்று அறிந்துக்கொள்வீராக ! இன்று என் வார்த்தைகளையும், கிரியைகளையும் என் அன்பின் சாட்சியாக ஏற்றுக்கொள்ளும் . இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Loving and Almighty God, thank you for loving me. Thank you for both saying it and showing it. Please know, dear Father, I love you, too! Accept my words and actions today as a testimony to my love. Through Jesus I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  யோவான் 3:16

கருத்து