இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மெய்யான அன்பு வெறுப்பை உள்ளடக்கியது. மெய்யான அன்பு என்றால் தீமையை நாம் வெறுப்பதாகும் . அந்த தீமை நம் இருதயங்களில் ஊடுருவி, நம்முடைய உறவுகளை கெடுப்பதை நாம் வெறுக்கிறோம். நாம் நேசிப்பவர்கள் மீது அதின் விளைவுகளை நாங்கள் வெறுக்கிறோம். முறிந்த , பலவீனமான அல்லது இருமனமுள்ள வாழ்க்கை உள்ளவர்களுக்கு அது ஏற்படுத்தும் நித்திய அழிவால் நாம் எதிர்த்துநிற்கிறோம் . ஆகவே, நாம் நேசிப்பவர்களுக்காக நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம், நன்மையை பற்றிக்கொண்டு, தீமையிலிருந்தும் துன்மார்க்கமான காரியங்களிலிருந்தும் விலகி இருப்பதுதான்.
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே , என்னுடைய வாழ்க்கை என் குடும்பத்திற்க்கும் எனது நண்பர்ககளுக்கும் நன்மை மற்றும் மகிழ்ச்சியின் ஊற்றாக இருக்கட்டும். தயவு செய்து எனக்கு நன்மையைக் காணும் ஞானத்தையும், அதை ஆர்வத்துடன் தொடரும் தைரியத்தையும் கொடுங்கள். தீயவரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள், அவருடைய சோதனைகளை நான் பின்பற்றும்போது என்னை மன்னியுங்கள். எனது சொந்த சுயநல மற்றும் தீய முடிவுகளின் வீழ்ச்சியிலிருந்து நான் நேசிப்பவர்களைக் காப்பாற்றுங்கள். தயவாய் என்னைச் சுத்திகரித்து , பரிசுத்தப்படுத்துங்கள், அதனால் என் வாழ்க்கை உமக்குப் பரிசுத்தமாகவும் முழுமையாகவும் இருக்கும் . உம் பரிசுத்த குமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.