இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
குறிப்பிட்ட மக்கள் அத்தகைய சிறப்பு ஆசீர்வாதங்களாய் இருக்கிறார்கள் . நாம் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புக் கொண்டோமோ , ஊக்கமளிக்கும் மின்னஞ்சலைப் பெற்றோமோ , கையால் எழுதப்பட்ட கடிதத்தைப் பெற்றோமோ அல்லது அவர்களை முகமுகமாய் பார்த்தோமா என்பதை குறித்து கவலையில்லை. இப்படிப்பட்டவர்களை நினைவுகூரும் எந்த நேரத்திலும், அவர்களுக்காக நாம் தேவனுக்கு நன்றி கூறுகிறோம். எனவே, பவுலானவரின் மாதிரியைப் பின்பற்றி, நன்றி சொல்ல அவர்கள் நமக்குக் காரணங்களைச் சொல்வதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவோம்! நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
என்னுடைய ஜெபம்
அன்புள்ள தேவனே , நீர் என் வாழ்வில் கொண்டு வந்த பின்வரும் விலையேறப்பெற்ற நபர்களுக்காக நன்றி... (உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதித்த பலரின் பெயர்களை இங்கே குறிப்பிடவும் ). அவர்கள் என் வாழ்க்கையை ஆசீர்வதிக்க , அதை பல வழிகளில் செய்திருக்கிறார்கள். உம் கிருபையினால் , வல்லமையினால் மற்றும் பரிசுத்த ஆவியினால் அவர்களின் வாழ்க்கையை ஆசீர்வதித்தருளும் . இந்த விலையேறப்பெற்ற மக்களுக்காக நான் நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.