இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மைச் சுற்றியுள்ள அவிசுவாசிகள் நம்மை விட வித்தியாசமான சிறந்த நம்பிக்கைகள் கொண்டிருப்பதில் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நட்சத்திரம் அதைச் சுற்றியுள்ள இருள் நிறைந்த பெரிய வானத்தில் பிரகாசிப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. நீங்கள் கவனியுங்கள் ,அதுபோல ஒரு நட்சத்திரமும் இயேசுவின் சீஷரும் ஒரு முதன்மையான நோக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்: இருள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி, இருளிலே வெளிச்சம் பிரகாசிப்பிக்கவேண்டும் .எனவே, அப்படி பிரகாசிக்க கடினமாக இருக்கும் சூழ்நிலையில் , ​​நாம் ஆழ்ந்த இருளில் உள்ள நட்சத்திரங்கள் என்பதை நினைவில் கொள்வோம்; நாம் இல்லாமல், மற்றவர்களால் இருளை மாத்திரமே பார்க்க முடியும் ! நாம் இருளில் பிரகாசிக்கச் சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்தவுடன், குற்றம் குறைகளை கூறுவதற்கான சாத்தியகூறுகள் குறைந்துவிடும் மற்றும் , மேலும் வாதிடுவதற்கான காரணங்கள் இல்லாமற் போகும் ஏனென்றால் நாம் பிரகாசிக்கும் நட்சத்திரங்களாக இருக்க வேண்டிய ஒரு மாபெரும் அவசியத்தினால் இவைகள் இல்லாமற் போகிறது!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள ஆண்டவரே, உமது மகிமையைக் கண்டு உமது பிரசன்னதில் நிற்கும் நாளை மட்டுமே என்னால் எதிர்பார்க்க முடியும். இருளின் அந்தகாரத்தில் மூழ்கியிருக்கும் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஒளியாக இருக்க அடியேனுக்கு தைரியத்தையும் நேர்மையையும் எனக்குக் தாரும். உம் மகிமைக்காக இந்த நல்ல மீட்பின் தாக்கத்தை அடியேன் பெற்றுக்கொள்ள இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து