இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஜெயங்கொள்ளுகிறவர்கள் ! நாம் ஜெயங்கொள்வோம்!! வேதாகமத்தின் கடைசி புத்தகமான வெளிப்படுத்துதலைத் திறக்கும்போது, ​​இதுதான் நற்செய்தி - கிறிஸ்தவர்கள் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறார்கள் . ஏனென்றால் இயேசு ஒரு மெய்யான் ஜெயவீரர் . இப்போதைக்கு நமக்கு எப்படிப்பட்ட போராட்டம் இருந்தாலும், முடிவில் நாம் ஜெயம் பெறுவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

என்னுடைய ஜெபம்

எல் -ஷடாய், சர்வவல்லமையுள்ள தேவனே , இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதன் மூலம் எனக்கு முதன்மையான ஜெயத்தை தந்ததற்காக உமக்கு நன்றி. நீர் தீர்மானித்த நாளில் அவர் ஜெயத்துடன் வருவார் என்பதை நான் அறிவேன், ஆனால் அந்த நாள் வரை நான் உமக்காக ஜெயத்துடன் வாழ ஜெபிக்கிறேன். என் ஜெய ராஜாவாகிய இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து