இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சோர்ந்து போகுதல் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும் . ஊழியத்தின் ஒரு பகுதியில் சோர்வு என்பது உண்டாகும் . சோர்வு என்பது ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒரு பகுதியாகும். மற்றவர்களுக்கு நன்மை செய்வதில் நம் இருதயத்தை அமைக்கும்போது சோர்வு அநேக வேளை நம்மை ஆட்கொள்கிறது. இருப்பினும், தேவனின் அற்புதமான ஆசீர்வாதம் நம்மைப் புதுப்பிக்கிறது, நிலைநிற்கச் செய்கிறது மற்றும் மீண்டும் உயிர்ப்பிக்கிறது. ஒரு நண்பரின் ஊக்கமளிக்கும் வார்த்தையின் மூலமாக அவர் அதை செய்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் செய்வதன் மூலம் அவர் அதை நடப்பிக்கிறார் . நம் மனதை உற்சாகப்படுத்தும் பாடல்கள் மூலம் அதை செய்கிறார். அவர் அதை பரிசுத்த வேத வார்த்தைகள் மற்றும் ஜெபத்தின் மூலமாய் அதை செய்கிறார். எனவே, நம் சரீரமும் ஆவியும் சோர்வடையும் போது, நம் கரங்களை அமைதலாய் இருக்கவொட்டாமல் . நாம் உண்மையுடனும், ஒழுக்கத்துடனும், உத்தமத்துடனும் ஊழியம் செய்தால், தேவனுடைய கிருபை, அவர் நம்மைச் செய்ய அழைத்ததைச் செய்ய பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு அதிகாரம் கொடுக்கிறார் .
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பரலோகத்தின் தகப்பனே, உமக்கும் குறிப்பாக மற்றவர்களுக்கும் நான் செய்யும் ஊழியத்தில் நான் சில சமயங்களில் சோர்வாகவும் பெலனற்றும் இருப்பதைக் காண்கிறேன். அன்புக்குரிய பிதாவே , நான் தூக்கம், உடற்பயிற்சி அல்லது நல்ல உணவுப் பழக்கங்களைப் புறக்கணித்திருந்தால், தயவுசெய்து என்னைக் கண்டித்து உணர்த்தும் . நான் மிகவும் சமநிலையான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன், மேலும் எனது உதவி தேவைப்படுபவர்களுக்கு சிறப்பாக ஊழியம் செய்ய ஆற்றலையும் வலிமையையும் தாரும் . என் வாழ்வில் அந்த பிரச்சனைகளை நான் சரி செய்ய முற்படும்போது தயவுசெய்து எனக்கு பரிசுத்த ஆவியின் அதிகாரத்தை எனக்கு தாரும் . எனது ஆவிக்குரிய ஊட்டச்சத்தை நான் புறக்கணித்து, எனது சொந்த பெலத்தை சார்ந்து இருக்க முற்பட்ட அந்த சமயங்களில் என்னை மெதுவாக தண்டித்தருளும் . அன்புள்ள பிதாவே , என் வாழ்நாளின் எல்லா நாட்களிலும் உமக்கு சுறுசுறுப்பாகவும் திறம்படவும் ஊழியம் செய்ய விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே , இவை யாவற்றையும் கேட்டு ஜெபிக்கிறேன் . ஆமென்.