இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இரண்டு வல்லமையுள்ள சத்தியம் இங்கே முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக, தேவன் நம்மைக் கவனிக்கிறார் , நமக்கு மிகவும் தேவையானதை கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கிறார். இரண்டாவதாக, தேவன் நம்மில் பெரும்பாலானோரை அவருடனும் வாழும்படியாய் உண்டாக்கினார் மற்றும் ஒரு கணவனாக அல்லது மனைவியாக வாழ ஏற்ற துணையை கொடுத்தார் - எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரை நமக்குத் ஏற்ற துணையாக உருவாக்கினார். ஆம், மத்தேயு 19:10-11 மற்றும் 1 கொரிந்தியர் 7:32-38 ஆகிய இரண்டு வசனமும் , சிலர் தனித்து இருக்க ஈவை பெற்றவர்கள் என்பதை வலியுறுத்துகின்றன, மேலும் இந்த ஈவை பெற்ற எல்லோரும் தேவனை முழுமையாகவும் மெய்யாகவும் கனப்படுத்தும் ஒரு ஒண்டியாய் வாழ்க்கையை வாழ முற்பட வேண்டும். எவ்வாறாயினும், பெரும்பாலானவை நம் வாழ்க்கையை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் முழுமையடைந்தன. திருமணம் மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கைத் துணை என்பது தேவனின் ஈவாகும் மற்றும் நமது மனிதநேயத்தின் கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களை போல நாமும் வாழ்வோம்!
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமுள்ள தேவனே , எங்கள் தேவைகளை கவனித்துக்கொண்டதற்காக நாங்கள் உமக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம். பல சமயங்களில், எங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறோம், எங்களுக்கு என்ன தேவை என்று கேட்கிறோம். நாங்கள் விரும்புவதை மட்டும் செய்யாமல், எங்களுக்கு எவை சிறந்ததோ அதை செய்ததற்காக உமக்கு நன்றி! இப்போது, அன்பான பிதாவே , எங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நபர்களை உம்மிடமிருந்து ஈவாக பெற்றுக்கொள்ள உதவியருளும். எங்களில் திருமணமானவர்கள், தங்களுடைய மனைவியுடன் உண்மையாக வாழவும், அவர்களைக் கனப்படுத்தவும் , பாராட்டவும் , மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டு, பரிவோடு நடத்தி அவர்களோடு ஜீவனும் பண்ணும்படியாய் உம்முடைய உதவியை நாங்கள் நாடுகிறோம் . ஒண்டியாய் வாழ்ந்துகொண்டிருக்கும் நபர்களுக்காக , அவர்கள் மகிழ்ச்சியுடனும் உண்மையுடனும் வாழ வேண்டும் என்றும் மற்றும் நீர் எங்களுடைய வாழ்க்கையில் கொண்டு வருபவர்களுக்கு ஆசீர்வாதமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மாபெரிதான ஈவாகிய இயேசுவின் நாமத்தினாலே, அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.