இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இஸ்ரவேலர்கள் தனக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார் . கடந்த காலத்தில் அவர்கள் உண்மையற்றவர்களாக இருந்தபோதிலும், தேவனானவர் தம்முடைய மக்களுக்கு மன்னிப்பையும் நம்பிக்கையையும் மீண்டும் மீண்டும் வழங்கினார், அதனால் அவர்கள் அவருடன் ஒரு உறவை மீட்டெடுக்க முடியும். இப்போது தேவன் தனது புதிய உடன்படிக்கையின் மக்களான கிறிஸ்துவின் சபையை அணுகுகிறார், மேலும் இயேசுவின் தியாகம் மற்றும் உயிர்த்தெழுதல் காரணமாக இந்த வாக்குறுதியை வழங்குகிறார். கர்த்தர் நம்மை அவரோடே நிச்சயித்துக் கொள்வதற்கு (2 கொரிந்தியர் 11:2-3) நம்பமுடியாத அளவிற்கு மாபெரிதான விலையை கொடுக்கத் தயாராக இருப்பதால், அன்பிலும், நீதியிலும், நியாயத்திலும் , என்றென்றும், நாம் ஸ்தோத்திரத்துடனும், கீழ்ப்படிதலுடனும் பதிலளிக்க வேண்டும், அதனால் நாம் ஆடம்பரமாக இயேசுவோடு அவரது மணவாட்டியாய் கலியாண விருந்திலே பங்கடைவோம் (வெளிப்படுத்துதல் 19:9, 7-8). தேவனை ஏற்றுக்கொண்டு , அந்த மகிமையான நாளை எதிர்பார்த்து உண்மையுள்ளவர்களாக வாழ்வோம்!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பரலோகத்தின் பிதாவே , இரக்கமுள்ள தேவனே, உமது மக்களாகிய எங்களை மன்னித்தருளும் - முந்தைய உடன்படிக்கையின் கீழானவர்களும் இப்போது இயேசுவின் மூலமாய் புதிய உடன்படிக்கையின் கீழ் வாழ்கிற யாவரும் . உண்மையில்லாதவர்களாய் இருந்ததற்காக எங்களை மன்னியுங்கள். உமது இரக்கம் மற்றும் உறுதியான அன்பினை பார்க்கும்படி எங்கள் கண்களைத் திறந்தருளும் . உம் அன்பு, விசுவாசம், நீதி மற்றும் அன்பின் அடிப்படையிலான நியாயத்திற்கு கீழ்ப்படிதலுடன் நாங்கள் பதிலளிக்க முற்படும்போது எங்களுக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து