இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நெருக்கமான ஆவிக்குரிய நண்பர்கள் அரிதாகவே காணப்படுகின்றனர் - குறிப்பாக நமக்குத் தேவைப்படும்போது நம்மைப் பொறுப்பேற்கச் செய்யும் நண்பர்கள், நாம் சோர்வாக இருக்கும்போது நம்மைக் கட்டியெழுப்ப கூடியவர்கள் , வெற்றியை அனுபவிக்கும் போது நம்முடன் கொண்டாடக் கூடிய நண்பர்கள் அவர்களே . துரதிர்ஷ்டவசமாக, நம் நவீன உலகில் பலர் மிகவும் தனிமையாக இருக்கிறார்கள், அவர்களுக்கு அத்தகைய நண்பர்கள் இல்லை. அவர்கள் ஏதோவொன்றிற்காக தனிமையில் இருக்கிறார்கள், அல்லது இன்னும் சிறப்பாக, அவர்கள் அனுபவித்திராத ஒருவராக இருக்கிறார்கள், நம் நவீன கலாச்சாரத்தில், உண்மையான நண்பர்களுக்குப் பதிலாக நமக்கு அறிமுகமானவர்கள் மற்றும் சமூக ஊடக "நண்பர்கள்" மாத்திரமே உள்ளனர். நமக்கு விஷயங்கள் மோசமாக இருக்கும்போது அல்லது மற்றவர்களுக்கு கொடுக்க எதுவும் இல்லாதபோது, ​​​​அந்த நேரத்தில் அந்த நண்பர்கள் பிரச்சனையின் போது ஓடிவிடலாம் அல்லது நமது பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் நம்மோடு பழகுவதை குறைத்துக்கொள்ளலாம் . உண்மையான நண்பர்கள் நிச்சயமாகவே இருக்கிறார்கள். அவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் நமது மாம்ச குடும்பத்தை விட ஆழமாக இருக்கும் . இது எனக்கு எப்படி தெரியும்? தேவன் வாக்களித்திருக்கிறார் ! நான் பார்த்திருக்கிறேன்! என் குடும்பம் அதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டது! எனவே மற்றவர்களுக்கு அந்த வகையான நண்பராக இருங்கள் என்ற அழைப்பைக் கேட்போம்; அவ்வாறு செய்வதன் மூலம், நாம் அடிக்கடி நமக்கான ஒரு நண்பரைக் கண்டுபிடிப்போம் - ஒரு மாம்ச சகோதரன் அல்லது சகோதரியை விட நெருக்கமாக இருக்கும் ஒரு ஆவிக்குரிய நண்பர்.

என்னுடைய ஜெபம்

கிருபையும் பரிசுத்தமுள்ள பிதாவே , என்னை உம் குடும்பத்திற்கு அழைத்ததற்காக உமக்கு மிக்க நன்றி. உம் குடும்பத்தில் உள்ளவர்களுடன் அர்த்தமுள்ள நட்பைப் பெறவும், மற்றவர்களுக்கு உண்மையான நண்பராகவும் இருக்க முயலும்போது என்னை ஆசீர்வதித்தருளும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து