இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் நாம் பங்குகொண்டபோது (ரோமர் 6:3-7; கொலோசெயர் 2:12-15, 3:1-4), நாம் மரித்தோம் , ஆயினும் முன்பை விட ஜீவனுள்ளவர்களாக இருக்கிறோம். நாம் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டோம், இப்போது நமக்குள் வாசம் செய்யும் கிறிஸ்துவுடனே கூட மகிமையடைகிறோம் . மற்றவர்களை ஆசீர்வதிக்க அவர் நம் மூலமாய் கிரியை செய்கிறார் . நாம் இப்போது ஜீவனம் பண்ணும் இந்த மாம்ச உடலில் வாழும் இந்த புதிய வாழ்க்கை இனி நமது தனிப்பட்ட சக்திக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. நாம் ஜீவனோடு இருக்கிறோம், இந்த புதிய வாழ்க்கை கிறிஸ்துவின் கிரியை மூலமாய் நமக்கு உண்டாயிற்று . நம்முடைய ஒரே ஒரு மீட்பரின் மீது உள்ள விசுவாசத்தினால் இந்த ஜீவனுக்கு அதிகாரம் உண்டாயிற்று, அவரே நம்மை மீட்பதற்காகத் தம்முடைய ஜீவனை கொடுத்து அன்பைக் நமக்காக விளங்கச்செய்தார் .
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள மற்றும் பரிசுத்தமுள்ள தேவனே , உம் ஜீவனையும், வல்லமையையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்காக உமக்கு நன்றி. கிறிஸ்துவுடன் என் ஜீவனை இணைத்ததற்காகவும் , அவர் என்னுள்ளே ஜீவனோடு வாசம் செய்வதற்காகவும் உமக்கு நன்றி. அவருடைய அன்பும், கிருபையும் , வல்லமையும் என் கிரியைகளிலும் , குணத்திலும் காணப்படட்டும். என்னுடைய புதிய வாழ்க்கை இயேசுவையும், என்னில் அவருடைய பிரசன்னத்தையும் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதனால் நான் அவருடைய கிருபையை மற்றவர்களுக்கு பகிர்ந்துக்கொண்டு அவர்களை அவரிடம் கொண்டு வர முடியும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.