இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவ நீதி தம் மக்களைத் தண்டிக்கக் கோரும் போது பரலோகத்தின் தேவனானவர் தம்முடைய நீதியைச் செயல்படுத்துவதில் தாமதம் செய்கிறார் . "உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்" என்பது பழைய ஏற்பாட்டில் தேவன் அவரது மக்களுடனான உறவில் விவரிக்க மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடராகும் . தேவன் தம்முடைய மக்களை இரக்கம் காண்பித்து அவர்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். மனந்திரும்பி அவரிடம் திரும்புவதற்கான வாய்ப்புகளைப் பெற அவர் காலத்தை நீட்டிக்கிறார். இயேசுவுக்குள் , தேவன் தம்முடைய சொந்த குமாரனையே நம்முடைய பாவங்களுக்காகப் பரிகார பலியாகக் கொடுத்தார், அதனால் நாம் அவரிடத்திற்கு வருவதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம் . தேவனின் இதயத்திலுள்ள சித்தத்தை கேட்டு, நம் வாழ்க்கையையும் இருதயத்தையும் பரலோகத்திலுள்ள நம் பிதாவிடம் திருப்புவதன் மூலம் பதிலளிப்போம், அவர் நம்மை நேசிக்கிறார், நாம் அவருடைய நித்திய வீட்டிற்கு வர வேண்டும் என்று எப்பொழுதும் நமக்காக காத்திருக்கிறார் !
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே மற்றும் அப்பா பிதாவே , என் பாவத்திற்காக உமது குமாரனின் தியாகத்தில் மூலமாய் உம் அன்பு மற்றும் கிருபைக்காக நான் எப்படி நன்றி சொல்ல முடியும்? உமது கிருபைக்கு நான் வேண்டுமென்றே மற்றும் முழு மனதுடன் நன்றி காட்டாத அந்த நேரங்களுக்காக தயவுசெய்து என்னை மன்னியுங்கள். என் மீதான உம் இரக்கத்துக்காக நான் மிகவும் நன்றி செலுத்துகிறேன் . உம் கிருபையால் என்னை மன்னித்து சுத்திகரித்தது போல உமது பரிசுத்த ஆவியினால் என்னை பூரணப்படுத்துங்கள். நீர் என் கிருபை பொருந்திய பரலோகத் தகப்பனாக இருப்பதற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன், இவை யாவற்றையும் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.