இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம்மை மீட்பதற்காக தேவன் தம்முடைய குமாரனை மரிக்க அனுப்பியதினால் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? கிறிஸ்து இயேசுவில் தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பிலிருந்து நம்மை பிரிக்க முடியாததால் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? அன்பிலே பயமில்லை; பயப்படுவதற்கு நம்மைத் தவிர வேறு என்ன இருக்கிறது.மேலும், நம் பலவீனத்தில் நம்மை உறுதிப்படுத்தவும் பலப்படுத்தவும் தேவன் தம் ஆவியை நம்முடைய இருதயங்களில் ஊற்றினார்! நாம் தேவனையும் அவருடைய பிள்ளைகள் மீதும் அன்பு கூருவதினால், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பை நினைவுபடுத்துகிறோம், இது மற்றவர்கள் மீது நாம் வைத்திருக்கும் வரையறுக்கப்பட்ட அன்பை விட சிறந்தது. பயந்து அவரை விட்டு விலகுவதற்குப் பதிலாக, நம் ஜெபங்களைக் கேட்பவர் நம்மை நேசிப்பவரும், நம் அச்சத்தைத் தணிக்க விரும்புபவரும் ஆவார் என்பதை அறிந்து அவரை ஸ்தோத்தரிப்போம்.
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே, நான் உமது கோபாக்கினைக்கு பயப்படாமல் உம்மை துதிப்பதற்காக நன்றி. போற்றத்தக்க உம் வார்த்தைகளுக்காகவும் , இன்னும் எனது போதாமைகளைக் கண்டு பயப்படாமல் இருக்க முடியும் என்பதற்காகவும் உமக்கு நன்றி . எல்லா பிரமாணங்கள் , அச்சுறுத்தல்கள், நியாயங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் என்னில் வாசம் செய்யும் உம் அன்பு உம்முடைய பரிசுத்தம், நீதி, மற்றும் இரக்கம் ஆகிய இவைகள் என் வாழ்வில் உண்டாகட்டும் . பாவத்திலிருந்து என்னை மீட்டு, தம்முடைய அன்பை என்மேல் பொழிந்த இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.