இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நமக்கு ஒருவருக்கொருவர் தேவை. அதை நாம் சொந்தமாக உருவாக்கிக்கொள்ள முடியாது. நாம் இடைவிடாமல் சபையாய் ஒன்றுகூடி கிறிஸ்துவுக்குள் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் , இன்னுமாய் ஒருவருக்கொருவர் பரஸ்பர சேவை செய்து, அவர்மீது விசுவாசம் வைத்து ஜீவிக்க தேவன் நம்மை அழைக்கிறார். இயேசு மறுபடியுமாய் இவ்வுலகிற்கு வரும் நாள் மற்றும் நமது நித்திய வெற்றி சமீபத்தில் இருப்பதால், ஒருவருக்கொருவர் உதவுவதற்கும் உற்சாகப்படுத்துவதற்கும் நாம் இன்னும் அதிகமாக உந்துதல் பெற வேண்டும். இன்று நமது கர்த்தருடைய பத்தியில் தேவனுடைய ஆவியானவர் நமக்கு நினைவூட்டுவது போல, அன்பு மற்றும் நற்செயல்களில் ஒருவருக்கொருவர் எவ்வாறு சிறந்த முறையில் உதவுவது என்பதை நாம் சிந்தித்து திட்டமிட வேண்டும்.

என்னுடைய ஜெபம்

பிதாவாகிய தேவனே , மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய என்னை ஊக்குவிக்கவும் பெலப்படுத்தவும் எனக்கு ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை வழங்கியதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே நாங்கள் கூடி உம்மைத் துதிக்கும்போது மற்றவர்களை ஆசீர்வதிக்க என்னை எடுத்துப் பயன்படுத்தியருளும் . கிறிஸ்துவுக்குள் உள்ள என் சகோதர சகோதரிகள் என்னுடன் சேர்ந்து நற்செயல்களைச் செய்வதிலும் ஒருவரையொருவர் நேசிப்பதிலும் எவ்வாறு சிறந்த முறையில் ஊக்குவிப்பது மற்றும் பெலப்படுத்துவது என்பதை அறிய பரிசுத்த ஆவியின் உதவியை நான் கேட்கிறேன். நான் இன்னும் ஊக்கமளிக்கும் நபராக இருக்க ஜெபிக்கிறேன், மற்றவர்களை இயேசுவுக்குள் கட்டியெழுப்புவதில் பெயர் பெற்றவனாய் இருக்க வேண்டுகிறேன் . அவருடைய நாமத்துக்காகவும் , அவருடைய மகிமைக்காக நான் எப்பொழுதும் வாழ விரும்புகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து