இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பழைய ஏற்பாட்டின் சிறந்த சாயல்களில் ஒன்று, தேவன் தமது வலது கரத்தை வல்லமையுடன் நீட்டி, தம்முடைய மக்களுக்கு வல்லமையான காரியங்களை எப்பொழுதும் செய்கிறார். அநேகமுறை , இஸ்ரவேல் ஒரு பெரிய மற்றும் அனுபவம் வாய்ந்த எதிரிகளை எதிர்கொண்டார்கள் . அவருடைய மக்கள் அவரை முழுமையாக நம்பியபோது, தேவன் அவர்களுக்கு பெரிய ஜெயத்தை கட்டளையிட்டார் . இந்த ஜெயப்பாடலில், செங்கடலில் பார்வோனையும் அவனது சேனையையும் தோற்கடித்ததற்காக மோசேயும் மிரியாமும் தேவனைப் போற்றி ஸ்தோத்தரித்தனர் . இந்த அற்புதமான ஜெயத்திற்கு பின்னால் அதை கொடுப்பவர் மற்றும் வல்லமை வாய்ந்தவர் தேவன் என்று மோசே அவரை ஸ்தோத்தரித்தார் , மேலும் அந்த கனத்தை தனக்கானது என்று எடுத்துக்கொள்ள மோசே மறுத்துவிட்டார். நமது ஜெயம் மற்றும் வெற்றியின் காலங்களில் தேவனைப் போற்றுவது, நமது உண்மையான வெற்றி எங்கிருந்து உருவானது மற்றும் நீடித்தது என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது: கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது!!!
என்னுடைய ஜெபம்
பிதாவே , நீர் பரிசுத்தத்திலும் மாட்சிமையிலும் சிறந்தவர். நீர் அதிகாரத்தில் நிகரற்றவர். தேவனே, உமது வல்லமையினாலும், கிருபையினாலும் என்னைத் தாங்கி, பெலப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். உமது வலது கரத்தின் பெலத்தால் எனது மிகப் பெரிய எதிரியின் சக்தியை உடைத்ததற்காக நன்றி. "உம் வலது கரத்தின்" வல்லமையை நான் நம்பி உமக்காக வாழ எனக்கு தைரியத்தை கொடுத்தருளும் . வல்லமையுள்ள தேவனே , உம் குமாரன் இயேசுவின் நாமத்தினாலே நான் உம்மை துதித்து, ஜெபிக்கிறேன். ஆமென்.