இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இவை அனைத்தும் மிகவும் எளிமையானது. தேவன் அன்பாயிருக்கிறார். அவர் அன்பின் ஊற்றிடமும் மாதிரியுமாய் , திட்டமிடுபவருமாய் இருக்கிறார். அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நானும் அவரிடத்தில் அன்புகூருகிறேன். எப்படி அன்பு கூரவேண்டும் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் தேவன் அதை விளக்கி காண்பித்திருக்கிறார். அவர் என்னை தமது சாயலினாலே உருவாக்கி, அவருடைய குணாதிசயங்களைப் பகிர்ந்து கொண்டதால் என்னால் அன்பு கூரமுடியும். அவரே அன்பின் ஊற்றாகவும் , ஊக்கமாகவும் மற்றும் உச்சமாகாவும் இருக்கிறார். நான் அன்புகூருகிறேன், ஏனென்றால் அவர் ஆதியும், அந்தமும் , எப்போதும் அன்பு கூருகிறவராயிருக்கிறார் .

என்னுடைய ஜெபம்

ஆறுதலின் தேவனே , உமது அன்பினால் என்னை ஆறுதல்படுத்தியதற்காக நன்றி. ஒரு குழந்தை எப்படி பல விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதை பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்கிறதோ அது போல, நானும் உம்மைப் போலவே அன்புகூர கற்றுக்கொள்ள விரும்புகிறேன்: எப்படியென்னில் தியாகமாக, தன்னலமின்றி, தாழ்மையுடனும் செய்ய விரும்புகிறேன், மற்றவர்கள் உம் அன்பை சம்பாதிக்க முடியாது என்றும் , அதை பெற்று கொள்ள மாத்திரமே முடியும் என்று அறிந்தக்கொள்ளவார்கள் . இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து