இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நாம் வித்தியாசமானவர்கள் ! தேவன் நம்மை ஆணும் பெண்ணுமாக சிறுஷ்டித்தார் , அதனால் நாம் ஒருவருக்கொருவர் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். நாம் யாவரும் ஆணோ அல்லது பெண்ணோ நாம் ஒவ்வொருவரும் தேவனின் சாயலில் உண்டாக்கப்பட்டவர்கள். மனித உறவில் ஒரு கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் தங்கள் நெருக்கமான மற்றும் மேலான உறவை அவர்களுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அவர்கள் எப்பொழுதும் தங்கள் பெற்றோரை கனம் பண்ணவேண்டும் , ஆயினும் அவர்களின் குடும்பம் ஒருவருக்கொருவர் இசைந்து உள்ளது. இருவரின் வாழ்க்கையும் ஒன்றாக மாறுகிறது. அவர்கள் ஒருவரையொருவர் நெருக்கமாக அறிந்திருக்கிறார்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் பல காரியங்களில் அந்த நெருக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பும், அர்ப்பணிப்பும் உண்டாகும் சூழலில், அவர்கள் ஒருவருக்கொருவர் கணவன் மனைவியாக மாம்ச ரீதியாக நெருக்கமான அறிவைப் பகிர்ந்து கொள்கிறார்கள் அதாவது - "ஒரே சரீரமாக " மாறுகிறார்கள் மற்றும் ஒருவரையொருவர் ஆழமாக அறிந்துக் கொள்வார்கள் . இந்த உறவை மகிழ்ச்சியோடே அனுபவிக்க வேண்டும் (நீதிமொழிகள் 5), பாதுகாக்கப்பட வேண்டும் (1 தெசலோனிக்கேயர் 4:3-8), மற்றும் வாழ்நாள் முழுவதும் கொண்டாடப்பட வேண்டும் (மத்தேயு 19:6).
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் சர்வவல்லமையுமுள்ள பிதாவே, இன்றைய இச்சை நிறைந்த உலகில், உண்மையுடனும், உத்தமமாய்,பரிசுத்தத்துடனும் வாழ்வதற்கான வலிமையை எனக்கு அருள்வீராக . எனது உறவுகளுக்கான உம் சத்தியத்தை கண்டறியவும், திருமண வாழ்க்கையில் என்னை ஆசீர்வதிக்க நீர் என்னை இணைத்த நபருடன் மட்டுமே இசைந்து உம் சித்தத்தைக் கொண்டாடவும் நான் முற்படுகையில், என்னை அறிவுறுத்தவும், திருத்தவும், கண்டிக்கவும் உம் ஆவியினாலும் உம் வார்த்தையினாலும் என்னை நடத்தியருளும் . என் மணவாலனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில ஜெபிக்கிறேன். ஆமென்.