இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சங்கீதத்திலிருந்து இந்த வசனத்தின் அழகின் வல்லமையை கவனிக்க முடியும் . முதலாவது நம்பிக்கை: "கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்." (பிலிப்பியர் 1:6 வசனத்தையும் கவனிக்கவும் .) இரண்டாவது அறிக்கை : "கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது." (1 கொரிந்தியர் 13:8 வசனத்தையும் கவனிக்கவும்). இறுதியாக வேண்டுதல் : ஆண்டவரே "உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக". (சங்கீதம் 139:13-16 வரை உள்ள வசனத்தை பார்க்கவும்). பரலோகத்தின் தேவனோடு நாம் நடப்பதற்கு எவ்வளவு அழகான சமநிலையான வார்த்தை - நம்பிக்கை , அறிக்கை மற்றும் வேண்டுதல். "கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக."

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் தகப்பனே, யாவருக்கும் தேவனே, உமது சித்தத்தையும் நோக்கத்தையும் என்னில் நிறைவேற்றுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உம்முடைய மக்கள் மூலமாக நீர் பல நூற்றாண்டுகளாக எப்படி நேசித்தீர்கள் மற்றும் கிரியை நடபித்தீர் என்பதைப் பார்க்கும்போது, ​​​​உம் அன்பு பூமியில் என் காலத்தையும் கடந்தும் நீடிக்கும் என்பதை நான் நிச்சயமாக அறிவேன். இருப்பினும், அன்புள்ள தேவனே, நான் வாழும் என் நாட்களில் சில போராட்டங்களையும் சிரமங்களையும் எதிர்கொள்கிறேன், எனவே என் வாழ்வில் உமது கிருபையுடனும் வல்லமையுடனும் இடைபடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். எனக்கான உம் நோக்கத்தை என் வாழ்க்கையிலே நிறைவேற்றுங்கள். மேலும், தயவு செய்து உமது கரத்தின் கிரியையாகிய என்னைக் கைவிடாதேயும். இயேசுவின் நாமத்தின் மூலமாய் நான் நம்பிக்கையுடன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து