இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு பயப்படுவதினால், கிருபையானது நம்மை இயேசுக்குட்பட்டவர்களாயிருந்து , நம்முடைய மிகவும் அழிவுகரமான அடிமைத்தனத்திலிருந்து மீட்டு , விடுதலையாக்குகிறது. தேவனின் கிருபையும் இயேசுவின் மீதுள்ள விசுவாசமும், நம்மைக் குற்றவாளியாக்கி மரணத்திற்கு வழி நடத்திச் செல்லும் பிரமாணத்தினின்று விடுதலையாக்கினது . பரிசுத்த ஆவியானவர் நம்மை விடுவிக்கிறார், நியாயப்பிரமாணத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், நியாயப் பிரமாணம் கோரும் மரண ஆக்கினையிலிருந்து நம்மை விடுவிக்கவும். இயேசுவிலும், அவருடைய ஆவியின் வல்லமையினாலும், தேவன் நம்மை என்றென்றும் அவருடைய பிள்ளைகளாக மாற்றுகிறார்!

Thoughts on Today's Verse...

Grace sets us free in Jesus from our most destructive bondage, our fear of God's judgment. God's grace and our faith in Jesus liberated us from the law, which convicts and leads to death. The Holy Spirit sets us free, not just to fulfill what the Law intended but also to deliver us from the penalty of death that the Law required. In Jesus, and by the power of his Spirit, God sets us free to be his children forever!

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , நீர் கொடுத்த விடுதலைக்காக நன்றி. அதை எனக்குக் கொடுக்க நீர் மாபெரிதான விலையை கொடுத்தீர் என்பது எனக்குத் தெரியும். அந்த விடுதலை என் இருதயத்தை திடமான மகிழ்ச்சியுடன் எழ விடாததற்கு என்னை மன்னியுங்கள். உமது ஆவியின் வல்லமையால் என்னை வழிநடத்தும், அதனால் உமது இரட்சிப்பின் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் நான் அனுபவிக்க முடியும் - எனது நாட்களின் முடிவில் மட்டுமல்ல, இன்றைய தருணங்களிலும். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Abba Father, thank you for your deliverance. I know you paid a very high price to give it to me. Forgive me for not letting that deliverance make my heart soar with confident joy. Lead me by the power of your Spirit so that I can experience the freedom and joy of your salvation — not just at the end of my days, but in the moments of today. In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of ரோமர் 8:1-2

கருத்து