இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நீங்கள் விரும்பும் மக்களின் மீது தேவனின் வல்லமைமிக்க நாமத்தை எவ்வாறு செலுத்த விரும்புகிறீர்கள்? இந்த ஆசாரியகள் கூறும் ஆசீர்வாதம் அவருடைய நாமம் - அவருடைய வல்லமை மற்றும் அதிகாரத்தை காண்பிக்கிறது - அவரது மக்கள் மீது ஆசீர்வாதமாய் கொடுக்க உதவுகிறது என்று தேவன் வாக்குறுதி அளித்தார். என்ன ஒரு ஆச்சரியமான ஈவு ! இந்த உண்மையுள்ள ஆசீர்வாத வார்த்தைகளால் நாம் மற்றவர்களை ஆசீர்வதிக்கலாம் மற்றும் பெலப்படுத்தலாம்! இப்படிப்பட்ட ஆசீர்வாதம் நிறைந்த வார்த்தைகள் பரிசுத்த வேதாகமம் முழுவதும் காணப்படுகின்றன. தேவனின் இந்த ஆசீர்வாதங்களை மற்றவர்கள் மீது உச்சரிப்பதற்கான வழிகளை நாம் ஏன் இன்று தேடத் தொடங்கக்கூடாது? நீங்கள் இந்த நாளுக்கான வார்த்தையிலிருந்து தொடங்கலாம், பின்னர் பரிசுத்த வேதத்தில் நீங்கள் காணும் பலவற்றைச் சேர்க்கலாம். உங்களுடைய தனிப்பட்ட ஆசீர்வாத குறிப்பாக இந்த வார்த்தைகளை , மின்னஞ்சல், அஞ்சல் அல்லது நீங்கள் நேசிக்கும் ஒருவருடன் நேரில் சம்பாஷிக்கும் போது இந்த வார்த்தைகளை அவர்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம் !
என்னுடைய ஜெபம்
அன்புள்ள தேவனே, பரலோகத்தின் பிதாவே, உம்முடைய ஒவ்வொரு நன்மையான மற்றும் பரிபூரணமான ஈவுகள் யாவும் மற்றும் உம் ஆசீர்வாதங்கள் எனக்கு முழுமையாகப் புரிந்துகொள்ளவோ அல்லது எண்ணவோ முடியாத அளவுக்கு அதிகமானவை. இன்று மற்றவர்களிடத்தில் உம்முடைய ஆசீர்வாதங்களை. குறித்து பேச என்னைப் பயன்படுத்துங்கள். பார்க்க நல்ல மனக்கண்களையும், கேட்கக் காதுகளையும் எனக்குக் தாரும் , உம் ஆசீர்வாதங்களை இன்று நான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்! உம்முடைய மிகப்பெரிய ஆசீர்வாதமாகிய இயேசு கிருத்துவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.