இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இன்று நாம் வாழ்கிற ஜீவியத்தில் மிக துரிதமாய் கிடைத்த வெற்றியினால் அல்லது , மோசமான விளையாட்டினால் உண்டாகும் சிலிர்ப்பினால் அல்லது ஒருவரை புகழ்ந்து முகஸ்துதி செய்வதினால் மாத்திரமே நாம் உற்சாகம் கொள்ளுகிறோம் . நாம் மகிழ்ச்சியுடன் துதித்து பாடுவதற்கு ஒன்று உள்ளது: சர்வவல்லமையுள்ள தேவனானவர் எங்களுடைய பிதாவாய் இருக்கிறார் . அவர் நித்தியமானவர். அவர் "நிலையற்ற இவ்வுலகில் " மாறாத அசைக்கமுடியாத ஸ்திரமான எங்கள் இரட்சணியக் கன்மலை . நம் தேவனை குறித்து நாம் ஆனந்த மகிழ்ச்சியுடன் சத்தமிடலாம் . அவர் நாம் கருவில் உண்டான நாளிலிருந்து நம்மை அறிந்திருக்கிறார், உலகம் தோன்றுவதற்கு முன்பே அவர் நம்மை நேசித்தார், அவர் நம்மை இரட்சிக்க தம்முடைய நேச குமாரனை நமக்காக அனுப்பினார், மேலும் அவர் ஒரு நாளில் நம்மைத் தம்மிடம் மறுபடியுமாய் சேர்த்துக்கொள்ள வருவார்! சில நேரங்களில் நாம் அமைதியுடனும் பயபக்தியுடனும் இருக்கிறோம்! மகிழ்ச்சியுடனும் பாடுவோம், கர்த்தரை நோக்கி உரக்கக் சத்தமாய் கூப்பிடுவோம்.
என்னுடைய ஜெபம்
அல்லேலூயா, கர்த்தராகிய ஆண்டவரே, உமது இரட்சிப்பை எனக்காக என்னிடம் கொண்டு வந்தீர்! உமது கிருபையால் என்னை ஆசீர்வதித்தீர், உமது அன்பினால் என்னை ஆறுதல்படுத்தி, உமது பரிசுத்த ஆவியினால் என்னைப் புதுப்பித்தீர். உம்முடைய அநேக வளமான ஆசீர்வாதங்களால் என் வாழ்க்கை நிரம்பி வழிகிறது. நான் உம்மை என் முழு இதயத்தோடு துதிக்கிறேன். என் எண்ணங்களால் உம்மை போற்றுகிறேன். என் வார்த்தைகளால் உம்மை துதிக்கிறேன் . என் கரங்களினால் உம்மைப் புகழ்கிறேன். நான் என்னவாக இருக்கிறேனோ அவை அனைத்தையும் கொண்டு உம்மை போற்றி புகழ்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன், ஆமென்.