இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனின் ஆசீர்வாதம் நம்மீது மாத்திரமல்ல , அவருடைய பிரசன்னமும் நம்முடன் எப்பொழுதும் செல்கிறது. அவர் நம்மோடு இல்லாத இடத்திலே நாம் ஒருபோதும் இருக்கவே முடியாது (சங்கீதம் 139:1-24). அவருடைய பிரசன்னமும் வல்லமையும் நம்மைத் தாங்கி பெலப்படுத்தும். நமது மாம்ச சரீரங்களிள் அல்லது நாம் ஜீவிக்கிற இந்த அழிந்து போகிற உலகங்களில் என்ன நடந்தாலும், ஒவ்வொரு எதிரியின் மீதும், இயேசுவின் மூலமாய் எல்லா துன்மார்க்கத்தின் மீதும் தேவன் நமக்கு இறுதி வெற்றியைக் கொடுத்திருக்கிறார். இயேசுவை முழுமையாய் நம்பாமல் சந்தேகத்திற்கிடமானவர்களும், எதிரிகளும் கூட நம் தேவனை வணங்குவார்கள், அவருடைய பாதத்தில் முழங்காற்படியிட்டு , நம்முடைய விசுவாசம் சரியானது மாத்திரமல்ல , அது ஜெயத்தை கொடுக்கும் என்பதையும் அறிந்துக்கொள்ளுவார்கள் (1 தெசலோனிக்கேயர் 1:1-10, பிலிப்பியர் 2:9-11). அல்லேலூயா!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள அப்பா பிதாவே ! நீர் பரலோகத்தின் தேவன் மாத்திரமல்ல , என் இருதயத்தின் தேவனும் நீர் ஒருவரே . நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நீர் என்னை கவனித்துக்கொள்வதால் அடியேனை உள்ளேயும் வெளியேயும் முழுமையுமாய் அறிந்திருக்கிறீர்கள். அழுகையின் கூக்குரலையும் மற்றும் இரக்கத்திர்க்கான எனது அழுகையை நீர் கேட்பீர். என் போராட்டங்களையும், பாரங்களையும் நீர் என்னுடனே பகிர்ந்து கொள்கிறீர். என் எண்ணங்களையும், பாடல்களையும், ஸ்தோத்திரங்களையும் நீர் எப்பொழுதும் கேட்கிறீர். தயவு செய்து ஒவ்வொரு சரீர மற்றும் ஆவிக்குரிய எதிரிகளிடமிருந்தும் என்னை விடுவித்து, உம்மில் என் நம்பிக்கையில் உறுதியாக நிற்க எனக்கு தைரித்தை தாரும் . இயேசுவின் நாமத்தினாலே , இவை யாவற்றையும் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து