இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
வாழ்க்கை நொறுங்குகிறது, நாங்கள் மீண்டும் சிறு பிள்ளைகளாகவே இருக்க விரும்புகிறோம். பின்னர், ஒருவேளை, நம்மைக் கவனித்துக் கொள்ளவும், நமது நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அச்சங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் யாராவது இருப்பார்கள் - அவர்களின் கையைப் பிடித்து, குழப்பத்தில் நம்மை வழிநடத்துவோம். நமது குழப்பமான சூழ்நிலை மற்றும் கலவரம் நிறைந்த உலகில், தேவனின் உண்மை தன்மை மற்றும் அவரின் வாக்குறுதியாக நமக்கு பெலனாக வருகிறது. பயத்துடன் இருக்கும் பிள்ளைக்கு துணையாக இருக்கும் அன்பான பெற்றோரைப் போல, தேவன் இரங்கி வந்து ஆவிக்குரிய ரீதியில் நம் கரங்களை பிடிக்கிறார். "பயப்படாதே. நான் உன்னுடனே இருக்கிறேன். நான் உனக்குத் துணைநிற்கிறேன்" என்ற விலையேறப்பெற்ற வார்த்தைகளால் நம்மை ஆறுதல்படுத்துகிறார். கர்த்தர் தூரத்தில் இருப்பதாகத் தோன்றினாலும், இந்த வாக்குத்தத்தத்தின் எதிரொலி நாம் ஒருபோதும் தனியாகவோ அல்லது மறக்கப்படதாகவோ இல்லை என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது (எபிரெயர் 13:5-6; ரோமர் 8:32-39).
என்னுடைய ஜெபம்
அப்பா பிதாவே , உம்முடைய பிரசன்னமும் உதவியும் எப்பொழுதும் என் அருகிலேயே இருக்கிறது , அதை அப்படியே இன்றும் நம்புவதற்கு தயவுசெய்து எனக்கு உதவுங்கள். அன்புள்ள பிதாவே , நான் இதை நம்புகிறேன் ஆனாலும் சில சமயங்களில், என்னுடைய சந்தேகங்களையும் அச்சங்களையும் போக்க எனக்கு உம் உதவி தேவை. கடினமான சமயங்களில் நீர் தொலைவில் இருப்பதாகவும், நான் தனியாக விடப்பட்டவனாக உணர்ந்ததாக நான் ஒப்புக்கொள்கிறேன். உம் பிரசன்னமும் மற்றும் கவனிப்பையும் உம் பரிசுத்த ஆவியின் மூலம் எனக்கு நினைப்பூட்டுங்கள். எனது போராட்டம் மற்றும் சந்தேகத்தின் தருணங்களில், தயவுசெய்து உம் சமூகத்தை தெரியப்படுத்துங்கள். அதை நான் நம்புகிறேன், ஆனாலும் தயவுசெய்து என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவும் .* இயேசுவின் நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென். உடனே பிள்ளையின் தகப்பன் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான், (மாற்கு-Mark - 9:24 ).