இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
உலகம் பெரும்பாலும் விசுவாசிகளுக்கு விரோதமான இடமாக இருக்கலாம். அவருடைய ஆவிக்குரிய பிள்ளைகளாகிய நாம் ஒருபோதும் தனியாக விடப்படுவதில்லை என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று தேவனானவர் விரும்புகிறார். தேவன் தம் பரிசுத்த ஆவியின் மூலமாக நமக்குள் ஜீவிக்கிறார் . ஆகவே, வேறொருவர் எந்த ஆவியைப் பெற்றிருந்தாலும், தேவனின் பரிசுத்த ஆவியானவர் பெரியவர், அதிக வல்லமையுள்ளவர், அதிக மகிமை நிறைந்தவர் என்று நாம் உறுதியாக நம்பலாம். நாம் எதிர்கொள்ளும் எந்த சக்தியையும் விட நமக்குள் இருக்கும் தேவனின் பிரசன்னம் அதிகமாக இருப்பதால் வெற்றி நமதே. அனைத்து சக்திகள், அதிகாரங்கள் , ஆவிகள் மற்றும் எதிரிகள் மீது நம்முடைய வெற்றி உறுதி. இது நமது ஞானஸ்நானத்தில் நமக்கு அளிக்கப்பட்ட ஒரு முக்கிய வாக்குறுதியாகும், ஏனென்றால் நாம் இயேசுவோடு மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் பங்கு கொள்கிறோம், அதாவது பாவம், மரணம், சாத்தான் மற்றும் நரகம் ஆகியவற்றின் மீதான அவருடைய வெற்றியில் நாம் பங்கு கொள்கிறோம் (கொலோசெயர் 2:12-15; 3:1-4). ஆம், உலகில் இருப்பவரை விட நம்மில் இருப்பவர் பெரியவர்!
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே , உமது வாக்குறுதிகளின் மீது எனக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும், உறுதியையும் தாரும் . உமது மகிமைக்காகவும் உமது சித்தத்தின்படியும் நான் தைரியமாக வாழ விரும்புகிறேன். இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் பங்கேற்க அனுமதித்து, அவருடைய மகிமையில் நான் பங்கேற்பதை உறுதிசெய்து, உம் வெற்றியை எனக்கு உறுதியளித்ததற்காக நன்றி. எனக்குள் வாழும் உம் பரிசுத்த ஆவியானவரின் மூலம் இந்த வெற்றிகரமான வாழ்க்கையைப் பெற எனக்கு அதிகாரம் அளித்ததற்காக நன்றி. எல்லா மகிமையும் , மகத்துவமும், ஸ்தோத்திரமும் உமக்கே உரியன. இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.