இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் புத்தியீனராய் , முழுமையற்றவர்களாய் இருந்த வேளைகளில் , ​​நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு அவசியமுள்ளவர்களாகவும், ஞானம் நிறைந்தவர்களாகவும் , பயனுள்ளவர்களாகவும் இருக்க முடியும் என்பதை பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். நம் நம்பிக்கை தேவன் மீது இருக்கும் போது, ​​அவர் நம் விசுவாசத்தின் ஓட்டத்திலே நமக்கு உதவ ஒருவரையொருவர் கொடுத்திருக்கிறார். விசுவாசத்தின் ஜீவியத்தில் தனித்து விடப்பட்டவர்களாய் வாழாமல், ஒருவரையொருவர் சார்ந்து, நம்முடைய இரட்சிப்பு நிறைவேற மற்றும் பலத்திற்காக கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கும்போது ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொள்வோம்.

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , என் வாழ்க்கையில் என்னை வனைந்து , கற்பித்த, சீர்திருத்திய, இன்னுமாய் உம்முடன் இணைத்ததற்காக நன்றி. அவர்களின் வார்த்தைகளை , மாதிரிகள் மற்றும் அரவணைப்பு மூலம் நீர் எனக்கு ஆதரவளித்ததற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உமக்கான எனது ஊழிய பயணத்தில் பயணிக்க ஒரு குடும்பத்தை வழங்கியதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து