இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இன்று ஒரு நேரடியான கருத்தில் நாம் நம் கவனத்தை செலுத்துவோம். நாம் தேவனை மட்டுமே துதிக்க வேண்டும்! நமது நேரம், ஆர்வங்கள், வாழ்க்கை முறை, பணச் செலவுகள், பேச்சு ஆகியவற்றின் அடிப்படையில் நமது தேவன் யார் அல்லது எப்படிப்பட்டவர் ? கர்த்தர் தேவனா? நாம் பெயரளவில் மட்டுமே இயேசுவைப் பின்பற்றுபவர்களாக இருந்துவிட்டு மற்றும் பொய்யான தேவர்களுக்காக நம் வாழ்க்கையை வாழ முற்படுகிறோம் . நாம் முதலில் அவரை நேசிக்க வேண்டும் மற்றும் அவரை மட்டுமே தொழுதுக் கொள்ள வேண்டும். அவரால் மட்டுமே நம்மை துன்பத்திலிருந்து விடுவிக்க முடியும்!
என்னுடைய ஜெபம்
அன்பான பரலோகப் பிதாவே , எத்தனை பொய்யான தேவர்கள் நம் உலகில் திரலாய் வந்து நம் கவனத்தைத் ஈர்கிறாராகள் என்பதை நாங்கள் நிச்சயமாய் அறிந்திருக்கிறோம் . தயவு செய்து ஒன்றான எண்ணம் கொண்ட இருதயத்தினால் எங்களை ஆசீர்வதித்து அதிகாரத்தை தாரும் . நீர் மாத்திரமே ஒன்றாகிய மெய்யான எங்கள் தேவன் என்ற விசுவாசத்தை சிதைக்கும் அல்லது குறைக்கும் பொய்யான எதிலும் இருந்து எங்கள் இருதயங்கள் விடுபட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இயேசுவின் நாமத்தினாலே இவைகளை கேட்டு ஜெபிக்கிறோம். ஆமென்.