இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
லீப் நாளுக்கு உங்களை வரவேற்கிறோம்! இந்த ஆண்டு பிப்ரவரி 29 அல்லது 2/29 வரும்போது அன்று லூக்கா 2:29 நம்முடைய தியான வசனப் பகுதியாக இருக்கும் ,அதாவது வேத வசனங்களை அந்தந்த தேதியின் அடிப்படையாக தெரிந்துக் கொண்டுள்ளோம் என்பதை உங்களுக்கு மறுபடியுமாக நினைப்பூட்ட விரும்பினேன். இந்த லீப் நாளில் உங்களுக்காக எனது ஜெபம் என்னவென்றால், இயேசுவுடனான உங்களுடைய தனிப்பட்ட உறவு உங்களை மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க செய்து , குறிப்பாக அவர் செய்த எல்லா நன்மையின் ஆசீர்வாதங்களுக்காக அவருக்கு உரிய பயபக்தியுடனும் நன்றியுடனும் வணங்க வேண்டும். எங்கள் பரலோகத்தின் தேவன் உங்களுக்கு சமாதானத்தை தருவாராக! தேவபக்தியுள்ள சிமியோன் பிள்ளையாகிய இயேசுவை பார்த்தபோது இந்த வார்த்தைகளை உச்சரித்தார். அதுப்போல நாமும் இயேசுவை துதிப்பது நமது இலக்காகவும் முன்னுரிமையாகவும் இருக்க வேண்டும். நம்முடைய இரட்சிப்பாகிய இயேசுவை நாம் சரீர பிரகாரமாக பார்க்க முடியாவிட்டாலும், சிமியோனைப் போல அவரை நம் கரங்களில் பிடித்துக் கொள்ள முடியாவிட்டாலும், வேதம், ஆராதனை அல்லது தொழுகை , ஊழியம், சுவிசேஷம், விசுவாசம் மற்றும் பரிசுத்த ஆவியின் கிரியை ஆகியவற்றின் மூலமாய் நாம் அவரைப் பார்க்கலாம். தேவனை ஒரே மெய்யான தேவனாக கருதி, இயேசுவானவரை பின்பற்றி, துதித்து, அவரை நம் ஆண்டவராகவும், இரட்சகராகவும் ஆராதிப்பதையே நமது குறிக்கோளாகக் கொள்வோமாக!
என்னுடைய ஜெபம்
நீதியுள்ள பிதாவே , இயேசுவை நன்றாக அறிந்து கொள்ளவும், அவருடைய சாயலில் இன்னும் அவரைப்போல முழுமையாக மறுரூபமாகவும் , அவருடைய குணத்துடன் வாழவும் எனக்கு உதவிச் செய்யும் . அன்புள்ள தேவனே , என் குணத்திலும் நடக்கையிலும் நான் கிறிஸ்துவைப் போல இருக்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் எனது சிறந்த ஆசிரியர், நண்பர் மற்றும் ஆண்டவராகிய இயேசுவைப் போல என்னை மேன்மேலும் வளரச் செய்து ஒரு உண்மையான சீஷனாக இருக்க முயல்கிறேன். இயேசு கிறிஸ்து என்ற மேலான நாமத்தினாலே நான் உம்மைப் துதித்து போற்றி ஜெபிக்கிறேன். ஆமென்.