இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
எது உண்மையில் நம்மை நிறைவேற்றித் தாங்கும்? இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கான சிறந்த வழி, இன்னொருவரிடம் கேட்பதுதான்: நாம் மாண்ட பின்பு நம் உடல்கள் கல்லறைகளில் அமைதியாக வைக்கப்படும்போது நாம் எதை வைத்திருக்க அல்லது பிடித்துக்கொள்ள முடியும்? தேவனும் அவருடைய ஜனங்களுடன் கூடிய நமது உறவு மாத்திரமே மரணத்தையும் கல்லறையையும் கடந்து நீடிக்கும். நித்தியமாய் இருப்பவர் அவர் மாத்திரமே என்றால், பிற்பாடு இல்லாத ஒன்றிற்காக அவரை நாம் எப்படி விட்டுவிட முடியும்?
என்னுடைய ஜெபம்
வல்லமையுள்ள கர்த்தரே , இஸ்ரவேலின் பெலனானவரே , உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பவரே மற்றும் ஒவ்வொரு தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்றுபவரே , நீரே என் நம்பிக்கை, என் பெலன் மற்றும் என் எதிர்காலமுமானவர் . இவ்உலகத்தின் பாதுகாவலரே நீர் என் நாமத்தை அறிந்திருக்கிறீர் , என் சத்தத்தை கேட்கிறீர் , என்னைக் காக்கிறீர் என்பதை இன்று நான் அறிந்து மிக வியப்பில் வாழ்கிறேன். எனது கடந்த காலத்திலும் , எனது நிகழ்காலத்திலும், எனது எதிர்காலத்திலும் நீர் என்னோடு இருப்பதினால் அடியேன் சிறந்து விளங்குவதற்காக நன்றி. என் இரட்சகர் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.