இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இப்போது அது எவ்வளவு தொலைவில் உள்ளது - சூரியன் உதிக்கும் திசை தொடங்கி சூரியன் மறையும் திசை வரை, அவ்வளவு தூரமாய் தேவன் நம் பாவங்களை நம்மை விட்டு நீக்கினார் . ஆனால் முக்கிய வார்த்தை நீக்கப்பட்டது. நாம் பாவம் செய்து, பின்பு மனந்திரும்பி தேவனிடம் வரும்போது, ​தேவன் நம் பாவங்களை மட்டும் மன்னிக்கவில்லை; அவர் எல்லா அக்கிரமங்களிலிருந்தும் நம்மை இரட்சித்து பரிசுத்தப்படுத்துகிறார். எனக்குள் பரிசுத்தமில்லாதது அவருக்குள்ளாய் அவை நீதியாக எண்ணப்படுகிறது . முன்பு அசுத்தம் நிறைந்தது இப்போது சுத்தமாய் இருக்கிறது . எது கறை படிந்த்தாய் இருத்ததோ அது களங்கமற்றதானது. இது எப்படி சாத்தியம்? தேவன் இயேசுவுக்குள் நமக்கு கிருபை அளிக்கிறார்! சங்கீதக்காரன் சிறிதளவு மாத்திரமே அறிந்திருக்கக்கூடியதை நாம் இப்போது முழுமையாகக் காணலாம். தேவன் நம் பாவங்களை பார்க்கவில்லை, ஆனால் இயேசுவையே ஜீவ பலியாக பார்க்கிறார். இயேசுவின் இரத்தம் நம்மை சுத்திகரித்து பரிசுத்தப்படுத்துகிறது! நம்முடைய பாவங்கள் நீங்கி, சுத்தமாயிருக்கிறோம். பவுல் கிறிஸ்துவுக்குள் , கொலோசெயர் 1:22-ல் நமது புதிய அடையாளத்தை விவரிக்கிறார்: முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.

என்னுடைய ஜெபம்

இரக்கத்தின் பிதாவே , என் பாவங்களை மன்னித்து அவற்றை நீக்கியதற்காக நன்றி. இயேசுவின் இரத்தத்தினாலும், என்னை மன்னிக்க வேண்டும் என்ற உம்முடைய கிருபையினாலும் நான் உமக்கு முன்பாக பரிசுத்தமாகவும், குற்றமில்லாமல் நிற்கவும் முடிந்ததற்காக நன்றி. இப்போது நான் கேட்கிறேன், நீதியுள்ள பிதாவே, உமது பரிசுத்த ஆவியால் என்னைப் பெலப்படுத்துங்கள், இதனால் என் நல்நடக்கை இயேசுவுக்குள்ளாய் என்னைப் குறித்து நீர் கொண்டுள்ள சாட்சியை அவை பிரதிபலிக்கும். உம்முடைய குமாரனும் என் இரட்சகருமான கிறிஸ்து இயேசுவின் மகா உன்னதமான நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து