இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சில ஈவுகள் வாயின் வார்த்தைகளை காட்டிலும் மிகவும் விலையேறப்பெற்றது மற்றும் முழுமையாக போற்ற அவை மிகவும் அற்புதமானவை. இந்த ஈவுகளில் மிகவும் பெரியது என்னவென்றால் நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவது தான். நாம் யாவரும் பிதாவின் குடும்பத்தில் அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளோம். இயேசு நம்மை தேவனுடைய குடும்பத்தில், மூத்த சகோதரராகிய அவருக்கு உடன் சகோதரர்கள் என்று கூறுகிறார் (எபிரெயர் 2:14-18). உலகம் இதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அவர்கள் இந்த உண்மையை மறுப்பது, நம்முடைய புத்திரசுவீகாரத்தை எந்த விதத்திலும் அவை பொய்யாக்குவதில்லை (ரோமர் 8:14-17). எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவானவர் மாம்சமாகி (யோவான் 1:1-3, 10, 14-18) தேவன் சிருஷ்டித்த உலகத்திலும் அந்த மக்களோடு அவர் வாழ்ந்தபோது கூட உலகம் அவர் பிதாவின் குமாரன் என்று அடையாளம் காணவில்லை. தேவனுடைய வார்த்தை இன்னும் சத்தியத்தை அறிவிக்கிறது; நாம் யாவரும் தேவனுடைய புத்திரர்கள் !

Thoughts on Today's Verse...

Some gifts are too precious for words and too wonderful to fully appreciate. The greatest of these gifts is that we are God's children. We have been adopted into the Father's family. Jesus claims us as his younger siblings in God's family (Hebrews 2:14-18). Even though the world may not acknowledge this, their denials of this truth do not make our adoption any less true (Romans 8:14-17). After all, the world didn't recognize its Creator when he became flesh in Jesus (John 1:1-3, 10, 14-18) and lived among the people he had made. God's Word still proclaims the truth; we ARE the children of God!

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , உம்முடைய பிள்ளையாக இருப்பதினால் உண்டாகும் நம்பமுடியாத ஆசீர்வாதங்களுக்காக உமக்கு நன்றி. இந்த ஈவின் அர்த்தம் என்ன என்பதை நான் புரிந்து கொள்ளத் தொடங்கவில்லை என்பது எனக்குத் தெரியும். இருப்பினும், அன்பான பிதாவே , நான் உம்மை முகமுகமாய் பார்த்து, இந்த மகிழ்ச்சியின் அர்த்தத்தை முழுமையாக அறிந்துகொள்ளும் நாளை எதிர்பார்க்கும் அதேவேளையில், இந்த யதார்த்தத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

My Prayer...

Thank you, Abba Father, for the incredible blessings that come with being your child. I know I haven't begun to understand all the glorious things this gift means. However, dear Father, I look forward to joyously experiencing this reality while I anticipate the day when I can see you face to face and fully know the meaning of this joy. In Jesus' name. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of 1 யோவான்-1 John - 3:1

கருத்து