இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தீயவர்களாக இருந்தும் செழிப்பாகத் தோன்றுபவர்களை பார்க்கும்போது விரக்தியும் பொறாமையும் சில சமயங்களில் தோன்றுகிறது அல்லவா? தீயவர்களின் வெளிப்படையான மற்றும் குறுகிய கால வெற்றிகள் நம் நம்பிக்கையை சிதைக்கவோ அல்லது நம் மனதைக் குறைக்கவோ அனுமதிக்க வேண்டாம் என்று இந்த சங்கீதத்தில் உள்ள வசனம் நமக்கு நினைப்பூட்டுகிறது . அவர்களின் வெற்றிகள் தற்காலிகமானவை. அவர்களின் செல்வம் வாடும் பூவைப் போன்றது. அவர்களின் வாழ்க்கை புல்லைப் போன்றது, அது வாடி விரைவில் பறந்துவிடும். ஆயினும், துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். (சங்கீதம் 1:1-4).
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே , உமது பரிசுத்தமான மற்றும் ஒப்பற்ற நாமத்தை போற்றுவோம் . நீர் என்னை பலமாக ஆசீர்வதித்திருக்கிறீர்கள் . என் எதிராளிகளின் முன்னே நீர் என்னைக் காத்தீர். நீர் எனக்கு ஜீவனையும் , நம்பிக்கையையும், உம்முடன் எதிர்காலத்தையும் கொடுத்துள்ளீர்கள். இப்போதும் , அன்பான பிதாவே , மற்றவர்களிடம் இருப்பதைப் குறித்து கவலைப்படுவதில் என் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்க்க எனக்கு உதவியருளும் . துன்மார்க்கரின் செழிப்பைக் கண்டு பொறாமை கொள்ளாமல் இருக்க பரிசுத்த ஆவியானவரின் ஓத்தாசையை நான் நாடுகிறேன் . என்னை ஆசீர்வதிக்க நீர் செய்த அனைத்திற்காகவும் நன்றியுள்ள இருதயத்தையும் மற்றும் மனநிறைவையும் எனக்குத் தாரும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.