இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பாவம், துன்மார்க்கம் மற்றும் தீமை பற்றிய உண்மையைச் சொல்ல பயப்படும் உலகில் யோவானின் வார்த்தைகள் மிகவும் விசித்திரமாகத் தெரிகிறது. இன்னும் இவ்வுலகில் காணாமற் போன ஆடுகளாகிய மனிதர்கள் - இயேசுவை அறியாதவர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுவதாகக் கூறுபவர்கள் ஆனால் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாதவர்கள் - அவர்கள் யாவரும் மிகவும் அவசியமாய் மனந்திரும்ப வேண்டும். அதாவது நம் இருதயங்களையும் வாழ்க்கையையும் மாற்றி, தேவனை தேடுவது, இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு நம் குணாதிசயங்களை மாற்றிக்கொண்டு வாழ்வதாகும் . நாம் அவரைப் பின்பற்றவும் கீழ்ப்படியவும் தேர்வு செய்கிறோம், நம் விருப்பத்திற்கு மாத்திரம் அல்ல. ஆம், இரட்சிப்பு தேவனின் ஆச்சரியமான கிருபையினால் நமக்கு கொடுக்கப்படுகிறது . மறுபுறம், நம்மை மறுரூபமாக்காமல் அப்படியே இருக்கச் செய்யும் கிருபை மெய்யான கிருபை அல்ல. கிருபை இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலமும், அவர் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தின் மூலமும் நம்மை மன்னிப்பது மட்டுமல்லாமல், தேவன் , அவருடைய வழிகாட்டுதல் மற்றும் நமது நோக்கம் இல்லாத மற்றும் அழிந்துபோகக்கூடிய வாழ்க்கையிலிருந்து நம்மை விடுவிக்கிறது.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பரலோகத்தின் பிதாவே , நான் செய்த என் பாவத்திற்காக அடியேனை மன்னித்தருளும். நான் என் இருதயத்தை உம்மிடமாய் திருப்பி, உன் சித்தத்தின்படியும் , உம் மகிமைக்காகவும் என் வாழ்க்கையை வாழும்படியாய் ஒப்புக்கொடுக்கிறேன் , என் சுய விருப்பத்தின் படி அல்ல, நிச்சயமாக இந்த விழுந்துப்போன , உடைந்த மற்றும் இழந்த உலகின் வழிகள் அல்ல. இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து