இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம் வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலைகளின் மத்தியில் வாழ்வதற்கு ஒரு இடம் இருப்பதும், இன்னுமாய் தேவனின் பாதுகாப்பு மற்றும் கவனிப்பு பற்றிய உத்தரவாதம் இருப்பதும் இரண்டு முக்கியமான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை: தேவன் மீது நம்பிக்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்வது. இந்த இரண்டு கடமைகளின்படி நாம் வாழும்போது, நமக்கு புத்துணர்ச்சி, நம்பிக்கை மற்றும் சந்தோஷம் தரும் புத்தம் புதிய வழிகளில் தேவனின் சார்ந்திருக்க கற்றுக்கொள்கிறோம். நாம் கையிட்டு காரியங்களை செய்ய முற்படும்போது , இன்னுமாய் நன்மை செய்யும் போது தேவ கிருபையை விரிவுபடுத்துகிறோம் மற்றும் பரலோகத்தின் தேவனுடைய ஆசீர்வாதங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
என்னுடைய ஜெபம்
அன்புள்ள தேவனே , என் அப்பா பிதாவே , என் வாழ்வில் உம்மை நம்புகிறேன், நீர் அடியேனை ஆசீர்வதித்ததைப் போல நான் மற்றவர்களை ஆசீர்வதிக்க முற்படுகையில், உமக்கு மகிமையையும் கனத்தையும் கொண்டு வர ஒரு ஜீவனுள்ள பலியாக உமக்கு ஒப்புவிக்கிறேன் . நான் இதைச் செய்யும்போது, அன்பான பிதாவே , உம் அன்பான கிருபையுடனும் ஒப்பிடமுடியாத அன்புடனும் என்னைச் சந்திக்க நீர் விரைந்து வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன். நன்றி! உம் மாறாத அன்புக்காக நன்றி. உம் அளவில்லா பாதுகாப்பிற்காக நன்றி. எனது எதிர்காலத்தை உம் கைகளில் வைத்திருப்பதற்காக நன்றி. இயேசுவின் நாமத்தினாலே உம்மை போற்றி நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென். * ரோமர் 12:1-2.