இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆத்துமத்திலே தேரினவர்களாய் இருக்க நாம் செய்யக்கூடிய மிக மிக முக்கியமான காரியங்களில் ஒன்று சரியான விஷயங்களை குறித்தே ஆர்வம் கொண்டவர்களாய் இருப்பத தான். தேவையற்ற சில காரியங்களில் உள்ள சிக்கல்களைப் எண்ணி நாம் கோபப்படலாம். விளையாட்டு முதல் இனிப்பு வகைகள் வரை எல்லாவற்றிலும் நாம் பெருமளவில் ஆர்வமாக இருக்க முடியும். எனவே, தேவனுக்கு உண்மையிலேயே மிகவும் முக்கியமானது என்ன என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் ஆத்தும ஞானத்தில் நம்முடைய வைராக்கியத்தையும் ஆர்வத்தையும் அதிலே நிலைநிறுத்த வேண்டும். இல்லையெனில், நாம் அற்பமான ஒன்றிற்காக கஷ்டப்பட்டு உழைத்து, தேவனின் சித்தத்தை முற்றிலுமாய் இழக்க நேரிடும். நாம் நம் ஆத்தும கண்களில் கண் சொரிகிப்போன குருடாகி, தேவனுடைய மேலான திட்டத்தை மறந்துவிடலாம். என்னைச் சுற்றி வைராக்கியமுள்ள ஆட்களை நான் விரும்பினாலும், தேவனுக்கடுத்த காரியங்கள் மற்றும் ராஜ்யமாகிய சபையின் பணிகளில் நாம் வைராக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் அதிகமாக விரும்புகிறேன்.

என்னுடைய ஜெபம்

வல்லமையுள்ள மற்றும் பரிபூரணமான தேவனே , எதையாவது பற்றி "எல்லாவற்றையும் குறித்து கவலைப்பட்டு அல்லது வேதனைக்கொண்டு " இருப்பது எனக்கு எளிதானது மற்றும் அதினால் மறுநாள் புதிய விடியலின் போது தேவனுக்கான வைராக்கியத்தை இழக்க செய்கிறது . நான் செயலில் ஈடுபடத் ஆர்வத்துடன் எழும்புவேன் , ஆயினும் நான் "ஆயத்தமாய் இல்லை " அப்படி காரியங்களை அவசரமாயும், மூர்ககத்துடனும் செய்வதினால் பயங்கரமான சேதத்தை ஏற்படுத்துவேன். அன்புள்ள பிதாவே , எது சிறந்தது, சரியானது, சத்தியமுள்ளது மற்றும் ஆத்தும ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் காணும்படி தெளிந்த ஞானத்தை எனக்குக் தாரும் . அன்புள்ள பிதாவே , உமது நாமத்தினாலே மற்றவர்களை ஆசீர்வதிக்க முற்படுகையில், நான் உம்மைப் பணிந்து கணப்படுத்த விரும்புகிறேன். அதனால் என்னை வழிநடத்தும்படி ஆவிக்கேற்ற வைராக்கியமும், மெய்ஞானம் ஆகிய இவ்விரண்டையும் வேண்டிக்கொள்கிறேன். இதை இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து