இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எல்லா இடங்களிலும், எல்லாரிடத்திலும் பேதுருவானவர் தங்கள் இருதயங்களை தேவனிடமாய் திருப்பி, ஞானஸ்நானத்தில் தங்களை முழுவதுமாக ஒப்புக்கொடுக்கும் அனைவருக்கும் அவர் ஒரு வாக்குறுதியை அளிக்கிறார், இயேசு கிறிஸ்துவை தங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் முழுமையாக விசுவாசிக்கிறவர்கள் தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் மகத்தான நாமத்தின் மூலமாய் அவருடைய கிருபையினால் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது . பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்கள் யாவரும் இயேசுவின் பிரதான கட்டளையை நிறைவேற்றத் தொடங்கினர் என்பதை இந்தப் பகுதி (அப்போஸ்தலர் 2:33-47) நமக்கு நிரூபிக்கிறது (மத்தேயு 28:18-20): அவர்கள் சென்று, ஞானஸ்நானம் கொடுத்து, கர்த்தர் கட்டளையிட்டதைக் கடைப்பிடிக்க மக்களுக்குக் போதித்து அவர்களை அவருடைய சீஷர்களாக உருவாக்கினார்கள். அந்த ஆரம்பகால சீஷர்களைப் போலவே, நாமும் இந்த கிருபையைப் பகிர்ந்து கொள்வோம், இதன்மூலம் இயேசு கர்த்தாதி கர்த்தர் மட்டுமல்ல, தேவனின் அழைப்பைக் கேட்டு அவர்மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் இரட்சகரும், ராஜாதி ராஜாவுமாய் இருக்கிறார் என்பதை இந்த உலகம் அறியலாம்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் கிருபை நிறைந்த பிதாவே , நான் உம்மைப் போற்றுகிறேன். எதுவும் இல்லாத போது நீர் எனக்கு நம்பிக்கை கொடுத்தீர். என் மன உறுதி நீங்கிய போது நீர் எனக்கு பெலனை தந்தீர் . நீர் என்னை உம் கிருபையினால் ஆசீர்வதித்தீர், உம் பரிசுத்த ஆவியின் மூலம், உம்முடைய அன்பை பரலோகதிலிருந்து என் இதயத்திலே ஈவாக பொழிந்தீர் . உம் அன்பு, கிருபை, மன்னிப்பு, இரட்சிப்பு மற்றும் பரிசுத்த ஆவிக்காக நான் உம்மை எப்பொழுதும் போற்றுகிறேன் . இயேசுவின் நாமத்தின் மூலமாய் அடியேன் உம்மை சந்தோஷத்துடன் துதித்து ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து