இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
ஆவியின் சட்டம் மற்றும் ஜீவன் நமது பிரதான விடுதலை நாயகனான இயேசு மேசியாவின் கிரியையினால் கட்டமைக்கப்பட்டுள்ளது! பாவம் மற்றும் மரணத்தின் சட்டத்திலிருந்து நாம் விடுவிக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் உயிர்த்தெழுதலின் காரணமாக மரணத்திற்கு நம் மீது அதிகாரம் இல்லை. இயேசு சிலுவையிலே நாம் செலுத்த வேண்டிய பாவ கடனை கொடுத்து தீர்த்துவிட்டதால் பாவம் ஒருபோதும் நம்மீது உரிமை கோரமுடியாது . நாம் ஒவ்வொருவரும் தேவனுக்கு முன்பாக அவருடைய நீதியுள்ள பிள்ளையாக நிற்கிறோம், ஏனென்றால் நம்முடைய வல்லமையுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிரியையின் காரணமாக நாம் சுதந்திரமாக இருக்கிறோம். நம் எதிர்காலத்தில் ஆக்கினைத்தீர்ப்பில்லை, மகிமை மட்டுமே! அதோடு, பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு ஜீவனைக் கொண்டுவரும் தம்முடைய பிரசன்னத்தைப் பற்றிய இந்த வாக்குறுதியை இயேசு நமக்கு அளித்திருக்கிறார் : இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை. யோவான் 7: 37-39
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே , என்னை பாவ மரணத்திலிருந்து மீட்கும் தொகையைச் செலுத்தி, என்னை இரட்சிக்கும் திட்டத்திற்காக நன்றி. உம் ஒப்பற்ற கிருபையினால் நான் கொண்டிருக்கும் நம்பிக்கைக்காக நன்றி. இயேசுவே, பரிசுத்த ஆவியை என் இருதயத்தில் ஊற்றி, உமது ஜீவன் எனக்குள் துளிர்விடுவதை உறுதி செய்ததற்காக நன்றி. தேவனே இவை யாவற்றையும் உம் குமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே உம்மை புகழ்ந்து ஜெபிக்கிறேன் . ஆமென்.