இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கிறிஸ்தவர்களாகிய நாம், மோசேயின் நியாயப்பிரமாண சட்டமான தோராவின் கீழ் வாழ்ந்தவர்களை விட சற்று வித்தியாசமாக இந்தப் பகுதியை கேட்கிறோம். இயேசுவின் சிலுவை பலியின் காரணமாக நம்முடைய குற்றமற்ற தன்மை ஒரு ஈவாக வருகிறது என்பதை நாம் உணர்கிறோம் (ரோமர் 5:6-11; கொலோசெயர் 1:19-22). நியாயப்பிரமாண சட்டத்தை கடைப்பிடிக்க கடினமாக உழைப்பதன் மூலம் நாம் நியாயத்தீர்க்கப்படுவதில்லை (ரோமர் 3:28; கலாத்தியர் 2:16, 3:11, 24, 5:4). மாறாக, கர்த்தருடைய சித்தத்தின்படி நடக்க எங்களால் முடிந்த சிறப்பான யாவற்றையும் செய்கிறோம், ஆனால் தேவனின் கிருபையின் மீதும் பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் அதைச் செய்கிறோம் (ரோமர் 8:1-4). நியாயப்பிரமாண சட்டப்படி நம்மால் செய்ய முடியாததை பரிசுத்த ஆவியின் வல்லமையால் செய்கிறோம். தேவனுடைய சித்தத்தைச் செய்வது நமக்குப் பல ஆசீர்வாதங்களைக் நம் வாழ்க்கையில் கொண்டுவருகிறது. அந்த ஆசீர்வாதங்கள் எதிர்காலத்தில் நமக்கு உண்டாவது மட்டுமல்ல; நாம் தேவனுடைய மகிமைக்காக வாழ்கிறோம், தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அவருடைய பாதுகாப்பின் கீழ் நடக்கும்போது அவை இப்போதே தொடங்குகின்றன.
என்னுடைய ஜெபம்
பிதாவே , என்னை மிகவும் அன்புடன் ஆசீர்வதித்ததற்காக நன்றி. உமது சித்தத்தின்படி நான் வாழ முற்படுகையில், உமது பிரசன்னத்தின் ஆசீர்வாதத்தையும் பரிசுத்த ஆவியின் வல்லமையையும் என் வாழ்வில் அனுபவிப்பதை நான் அறிவேன். உமது விருப்பத்தைப் புரிந்துகொள்வதற்கான ஞானத்தையும், உண்மையாக வாழ்வதற்கான தைரியத்தையும் எனக்கு அருள்வாயாக. இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.