இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவன் நமக்குக் கொடுக்கும் பல ஈவுகளில் , அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் அவர் நம்மில் பிரசன்னமாகிய ஈவுவே மிகவும் விலையேறப் பெற்றது. *பரிசுத்த ஆவியின் பிரசன்னம் நம்மை தேவனுடைய ஆலயமாக்குகிறது (1 கொரிந்தியர் 6:19). *நாம் ஜெபிக்கும்போது தேவனுடைய சித்தத்தின்படி பரிசுத்த ஆவியானவர் நமக்காக பரிந்து பேசுகிறார் (ரோமர் 8:26-27). *பரிசுத்த ஆவியானவர் நம் மாம்ச இச்சையை மேற்கொள்ள உதவுகிறார் (ரோமர் 8:13-14). *பரிசுத்த ஆவியானவர் நம் உள்ளத்தில் நமக்குப் புது பெலத்தைத் தருகிறார் (எபேசியர் 3:16). *பரிசுத்த ஆவியானவர் நம்மை மேலும் மேலும் இயேசுவைப் போல் மறுரூபமாக்குகிறார் (2 கொரிந்தியர் 3:17-18). பரிசுத்த ஆவியானவர் பரலோகத்தின் சாட்சியாக நமக்குள் வாசம் செய்கிறார் , தேவனுக்காக வாழ நமக்கு உதவுகிறார். என்ன ஒரு பெரிதான ஈவு இது !
என்னுடைய ஜெபம்
பிதாவே, நான் ஜெபிக்கும்போது எனக்காகப் பரிந்துபேசுகிற உமது பரிசுத்த ஆவியானவருக்காக மிக்க நன்றி. உமக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்தமான வாழ்க்கையை வாழ நான் விரும்பும்போது, தயவுசெய்து உமது பரிசுத்த ஆவியின் மூலம் என்னைப் பெலப்படுத்துங்கள். அன்புள்ள பிதாவே, பரிசுத்த ஆவியானவர் என்னை நித்தமும் உமது குமாரனைப் போல் குணத்திலும், இரக்கத்திலும், நீதியிலும், உண்மையிலும் மறுரூபமாக்கவேண்டுமென்று ஏங்குகிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.